About: http://data.cimple.eu/claim-review/215fc0723d886ff11b6ef2556754a7294dc76473a222afd951ee048d     Goto   Sponge   Distinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இடம் பெற்றுள்ளது. நீட் தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் போராட்டம் நடத்தியது. இந்நிலையில், “ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களைக் கட்டாயப்படுத்துகிறார். ஒரு சீட் கொடுத்தால் நாங்கள் உங்கள் அடிமையா? வேல்முருகன் வேதனை” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: அரியலூர் மாணவி மரணத்தில் பாஜகவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தாரா திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்? Fact Check/Verification ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம். குறிப்பிட்ட வைரல் கார்டில் எழுத்துப் பிழைகள் இருந்தன. மேலும், எழுத்துரு, புதியதலைமுறையுடையதில் இருந்து சற்றே மாறுபட்டு இருந்தது. எனவே, வைரல் கார்டு குறித்து புதியதலைமுறை டிஜிட்டல் ஆசிரியர் கார்க்கி பவாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது, அவர் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று நமக்கு உறுதி செய்தார். மேலும், இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகனின் செயலாளர் கோபியிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, குறிப்பிட்ட செய்தி தவறான நோக்கில் பரப்பப்படுகிறது; அது போலியானது என்று தெரிவித்தார். Conclusion ஆளுநர் மாளிகையை முற்றுகையிட கூறி முதல்வர் ஸ்டாலின் எங்களைக் கட்டாயப்படுத்துகிறார் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: Fabricated Our Sources Puthiyathalaimurai Digital Head Gopi, PR of Velmurugan (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Authors Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 2 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software