schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே முற்றிலும் விலகுவேன் என்று நடிகர் சூர்யா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவை கடந்த 18-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
அந்தவகையில், இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினர்.
அதில், ஏற்கனவே, கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில், இந்த புதிய சட்ட திருத்த வரைவு அதனை இன்னும் வலுவாக்கும் எனக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது, கருத்து சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் செயல் எனவும் அவர்கள் கண்டித்திருந்தனர்.
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சினிமா, ஊடகம், கல்வி ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூன்று குரங்குகளாக மட்டுமே இருக்க முடியாது எனவும், அதனால், வரவிருக்கும் தீமைக்கு எதிராக குரல் கொடுப்பதே ஜனநாயகத்தை காக்கும் சிறந்த மருந்தாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவிற்கு எதிரான தன் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார்.
இதனிடையில் நடிகர் சூர்யா ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லாவிடில் தான் சினிமாவிலிருந்தே முற்றிலும் விலகுவேன் என்று கூறியதாக தினமலரின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என கேள்வி எழுப்பினாரா பிரகாஷ்ராஜ்?
ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே முற்றிலும் விலகுவேன் என்று சூர்யா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.
நடிகர் சூர்யா ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக தனது நிலைப்பாட்டை அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவாக பதிவிட்டிருந்தார். அப்பதிவில்,
“சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக.. அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல…”
என குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவின் இந்த டிவிட்டர் பதிவு குறித்து பல ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இந்த ஊடகங்களின் வரிசையில் தினமலரும் இதை செய்தியாக வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள நியூஸ்கார்டை எடிட் செய்தே ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே முற்றிலும் விலகுவேன் என்று சூர்யா கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
Also Read: தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்றாரா பிரகாஷ் ராஜ்?
ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே முற்றிலும் விலகுவேன் என்று நடிகர் சூர்யா கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Actor Surya Official Twitter Handle: https://twitter.com/Suriya_offl/status/1410870893572546562
Dinamalar: https://twitter.com/dinamalarweb/status/1410899157536100352
Dailythanthi: https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/07/02143853/Actor-Surya-tweets-about-Cinematograph-Amendment-bill.vpf
Dinamani: https://www.dinamani.com/cinema/cinema-news/2021/jul/02/suriya-tweets-against-proposed-changes-to-cinematograph-act-3652716.html
BBC Tamil: https://www.bbc.com/tamil/arts-and-culture-57694955
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
March 25, 2022
Vijayalakshmi Balasubramaniyan
August 2, 2023
|