schema:text
| - Fact Check: டெல்லியில் பாஜக வெற்றி பெற்ற பிறகு மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை, வைரலாகும் கூற்று தவறானது.
ஆனால், விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் டெல்லி மெட்ரோ கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதை தெரியவந்தது. டெல்லி மெட்ரோ அதிகாரிகளும் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். எங்கள் விசாரணையில் வைரலான பதிவு போலியானது என்பது நிரூபிக்கப்பட்டது.
By: Ashish Maharishi
-
Published: Feb 21, 2025 at 06:34 PM
-
புது டெல்லி (விஷ்வாஸ் நியூஸ்). டெல்லியில் பாஜக வெற்றி பெற்ற பிறகு ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அது பாஜக அரசமைத்த உடனேயே டெல்லி மெட்ரோ கட்டணம் 50% அதிகரித்து விட்டது என்கிற கூற்றுடனான செய்தியாகும்.
ஆனால், விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் டெல்லி மெட்ரோ கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதை தெரியவந்தது. டெல்லி மெட்ரோ அதிகாரிகளும் இந்தக் கூற்றை மறுத்துள்ளனர். எங்கள் விசாரணையில் வைரலான பதிவு போலியானது என்பது நிரூபிக்கப்பட்டது.
என்ன வைரலாகி வருகிறது?
ஃபேஸ்புக் பயனர் விவேக் யாதவ் ஆக்ரா ஒரு பதிவில், “பாஜக அரசு அமைந்ததும், உடனடியாக பாஜக டெல்லி மக்களுக்கு ஒரு பரிசை வழங்கியிருக்கிறது; டெல்லி மெட்ரோ கட்டணம் 50% உயர்த்தப்பட்டது” என்று எழுதியுள்ளார்.
இதன் ஆர்க்கைவ்டு பதிப்பை இங்கே காணவும்.
விசாரணை
விஷ்வாஸ் நியூஸ், தனது விசாரணையின் தொடக்கமாக, டெல்லி மெட்ரோவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளை ஸ்கேன் செய்தது. அதில் பிப்ரவரி 12, 2025 அன்று DMRC-யின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவைக் கண்டது. அந்த போஸ்ட்டில், சில சமூக ஊடகப் பதிவுகள் டெல்லி மெட்ரோவின் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டதான கூற்றுடன் உள்ளன என்று கூறப்பட்டது. டெல்லி மெட்ரோ கட்டணங்களை மாற்றியமைக்க, அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சுயாதீன கட்டண நிர்ணயக் குழுவால் மட்டுமே முடியும் என்றும், தற்போது அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்றும் அது தெளிவுபடுத்தியது.
மேலும், கூகுள் தேடலில் , பிப்ரவரி 13 தேதியிட்ட Jagran.com-ல் ஒரு அறிக்கை எங்களுக்குக் கிடைத்தது. அதில் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) 50% கட்டண உயர்வு பற்றிய வதந்திகளை மறுக்கிறது என்று கூறியது.
எங்கள் விசாரணையின் போது, கர்நாடகாவின் பெங்களூருவில் மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டறிந்தோம். பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) பிப்ரவரி 9, 2025 முதல் கட்டணங்களை 50% உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால், இப்போது அங்கு மெட்ரோவில் பயணம் செய்வது விலை உயர்ந்ததாக இருக்கும். அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.60 முதல் ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்மார்ட் கார்டு பயனர்கள் கட்டணத்தில் 5% வரை தள்ளுபடி பெறுவார்கள்.
விஷ்வாஸ் நியூஸ் விசாரணையை மேற்கொண்டு, DMRC-யின் தலைமை நிர்வாக இயக்குனர் அனுஜ் தயாளைத் தொடர்பு கொண்டது. வைரலான பதிவில் உள்ள கூற்று போலியானது என்றும், அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
கூடுதலாக, விவேக் யாதவ் என்ற பயனரின் ஃபேஸ்புக் சுயவிவரத்தை நாங்கள் ஆராய்ந்தோம், அந்த பயனர் உ.பி.யின் ஆக்ராவில் வசிக்கிறார் என்றும் அவருக்கு 4900 பின்தொடர்பாளர்கள் உள்ளனர் என்றும் கண்டறிந்தோம்.
முடிவு: வைரலாகும் இந்தப் பதிவு போலியானது என்றும், டெல்லியில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றும் விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லி மெட்ரோவே இந்தக் கூற்றை மறுத்துள்ளது.
Claim Review : டெல்லி மெட்ரோ கட்டணம் 50% அதிகரித்து விட்டது என்கிற கூற்றுடனான செய்தியாகும்.
-
Claimed By : Facebook user Vivek Yadav Agra
-
Fact Check : False
-
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
|