schema:text
| - Wed Jan 29 2025 14:30:37 GMT+0000 (Coordinated Universal Time)
உண்மை சரிபார்ப்பு: கும்பமேளா வைரல் வீடியோவில் காட்டப்பட்டுள்ள பெண் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியா?
ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லோரீன் பவல் ஜாப்ஸ் வைரல் வீடியோவில் இருப்பது அவர் இல்லை என்பது நமது குழு மேற்கொண்ட தணிக்கையில் தெரியவந்ததையடுத்து, அதில் இருப்பது சாத்வி பகவதி சரஸ்வதி என்று கண்டுபிடிக்கப்பட்டது
Claim :வைரலாகப் பகிரப்படும் சமூக வலைத்தள காணொளி ஒன்று, ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி இவர் எனக் குறிப்பிட்டு கும்பமேளாவில் கலந்துகொண்டதாகக் காணொளி வெளியிட்டுள்ளது
Fact :காணொளியில் காட்டப்படும் வெளிநாட்டுப் பெண் சாத்வி பகவதி சரஸ்வதி (Sadhvi Bhagawati Saraswati) என்பதும், ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லோரீன் பவல் ஜாப்ஸ் அல்ல என்பதும் தணிக்கையில் உறுதி செய்யப்பட்டது
உலகின் மிகவும் பிரலமான டெக் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ், அக்டோபர் 5, 2011 தனது 56-ஆவது வயதில் காலமானார். அவருக்கு லோரீன் பவல் என்ற மனைவியும், நான்கு பிள்ளைகளும் உண்டு. மன அமைதிக்காக இவர் புத்த மதத்தை தழுவியிருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது. இந்த சூழலில், அவர் மரணத்திற்கு பிறகு நடுத்தர வயதிலே அவரெழுதிய ஒரு கையெழுத்து கடிதம் சமீபத்தில் இந்திய மதிப்பில் ரூ. 4.32 கோடிக்கு ($500,312) க்கு போனம்ஸ் நிறுவனத்தால் ஏலமிடப்பட்டது. தனது 19-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு காத்திருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அதற்கு ஒரு நாள் முன்னர் தனது சிறுவயது தோழரான டிம் பிரவுனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், புத்த மதம் குறித்தும் இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட ஆன்மீக திருவிழா கும்ப மேளாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாகத் எழுதியிருந்தார்.
இந்நிலையில், ஜாப்ஸின் மனைவி லோரீன் பவல் இந்தியப் பயணம் கூடுதலாக கவனம் பெற்றது. ஜாப்ஸின் ஆன்மிக விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில், பவல் பிரயாக்ராஜுக்கு கும்ப மேளாவில் கலந்துகொள்ள சென்றார். பின்னர் மகா கும்பமேளா 2025-இல் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தின் தீர்த்தவாரியில் புனித நீராட திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் ஒவ்வாமை பாதிப்பு இருந்ததால் புனித நீராடவில்லை என செய்திகள் வெளியானது.
இந்த நேரத்தில், ஒரு வெளிநாட்டு பெண்ணின் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில், “‘கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற ஆப்பிள் (𝗔𝗣𝗣𝗟𝗘) போன் நிறுவனரின் மனைவி ஸ்டீவ் ஜாப்ஸ் (𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀)’ என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த ராஜா நாகர்கோவில் என்பவரின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ஆயிரக்கணக்கிலான பயனர்கள் பார்வையிட்டு பகிர்ந்துள்ளனர்.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
நாம் மேற்கொண்ட தணிக்கையில், காணொளியில் இருக்கும் வெளிநாட்டுப் பெண் ஸ்வீட் ஜாப்ஸ் மனைவி இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு, Telugu Post Fact Check குழுவால் உறுதி செய்யப்பட்டது.
உலகப் பணக்காரர்களின் ஒருவரான லோரீன் பவல், இந்தியா வந்திருந்தால் செய்தி நிறுவனங்கள் அதை பதிவு செய்திருக்கும் என்பது மறுக்கமுடியாதது. இந்த கூற்றை வைத்து, இது தொடர்பான செய்திகள் ஏதும் வெளியாகியுள்ளதா என்பதை கூகுள் சர்ச் வாயிலாக சோதனை செய்து பார்த்தோம். அப்போது, என்.டி.டி.வி (NDTV) செய்தித் தளத்தில், “ஆப்பிள் நிறுவனர் மனைவி லோரீன் பவல் ஜாப்ஸ், மகா கும்பமேளா 2025-இல் தான் கலந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று கூறியதாக செய்தி பதிவாகியிருந்தது. மேலும், "சுவாமி கைலாசானந்த் கிரி அவருக்கு "கமலா" என்ற இந்து பெயரைக் கொடுத்தார். லோரீன் ஆன்மீக நடைமுறைகளை ஏற்றுக்கொண்டார்," என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், ஜனவரி 13, 2025 அன்று இந்தியா டுடே பத்திரிக்கையாளர் ஐஸ்வர்யா பாலிவால் எக்ஸ் தளப் பதிவில், காவி நிற உடையுடன், மறைந்த ஆப்பில் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லோரீன் பவல் ஜாப்ஸ் பிரக்யராஜில் மகா கும்பமேளாவில் உள்ளார் என்ற பதிவுடன், ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தலங்களில் லோரீன் பவலின் தெளிவானப் புகைப்படங்களை தேடிப் பார்க்கையில், நியூயார்க் டைம்ஸ் (New York Times) செய்தித் தளத்தில், உலகின் 35-ஆவது பணக்காரர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி எனும் கட்டுரை வெளியாகி இருந்தது. இப்போது, பரப்படும் காணொளியில் இருப்பது ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி அல்ல என்பது உறுதியானது. எனினும், அந்த வீடியோவில் இருப்பவர் யார் என்பதை கண்டறிய முற்பட்டோம்.
அதற்காக, பகிரப்படும் காணொளியில் இருக்கும் இன்ஸ்டாகிராம் இலச்சினை உடன் இருக்கும் ‘@Sadhviji’ எனும் கணக்கை தணிக்கைக்கு உட்படுத்தினோம். மெட்டா தளத்தில் இந்த பெயரில் இருக்கும் கணக்கைத் தேடும்போது, அது ‘சாத்வி பகவதி சரஸ்வதி’ (Sadhvi Bhagawati Saraswati) என்ற புரொஃபைல் பெயரில் இருந்தது.
பின்னர், கிடைத்த பெயரை வைத்து கூகுளில் தேடி பார்த்தபோது, ஏ.என்.ஐ (ANI) இவரைக் குறித்த ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், பிரயாக்ராஜில் நடந்த பரமார்த் நிகேதன் கும்பமேளா முகாமில் சாத்வி பகவதி சரஸ்வதி பூஜைகள் செய்தார் என்று கூறப்பட்டிருந்தது.
ANI-இன் எக்ஸ் தள பதிவுகளைத் சோதனை செய்தபோது, அவர் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அது தொடர்பாக ஏ.என்.ஐ பதிவில், “சாத்வி பகவதி சரஸ்வதி முதலில் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்தவர் மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் ரிஷிகேஷில் உள்ள பரமார்த்த நிகேதனில் சுமார் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை சோதனை செய்தபோது, பரவிவரும் வீடியோ ‘மகா சங்கிராந்தி’ விழா அன்று எடுக்கப்பட்டது எனத் தெரியவந்தது.
அந்த வீடியோவில், “மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்! இன்று சூரியன் வடக்கு அரைக்கோளத்தில் நகரும் நாள்; அதாவது நாம் ஒளியை நோக்கி திரும்புகிறோம் என்று அர்த்தம்! மா கங்கா, மா யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கமத்தில் புனித நீராடி, மகா கும்பமேளாவில் இந்த நாளைக் கொண்டாடுவது எவ்வளவு புனிதமான வாய்ப்பு,” என்று குறிப்பிட்டிருந்தார்.
நாம் நடத்தியத் தணிக்கை மற்றும் ஊடக தரவுகளை வைத்து, ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லோரீன் பவல் ஜாப்ஸ் கும்பமேளாவில் கலந்துகொண்டார் எனவும், ஆனால் வைரல் வீடியோவில் காட்டப்படும் பெண் சாத்வி பகவதி சரஸ்வதி எனவும் உறுதி செய்யப்பட்டது. எனவே, இது தவறாகப் பகிரப்படும் காணொளியாகும் என்பதை Telugu Post Fact Check ஆராய்ந்து தீர்மானித்துள்ளது.
News Summary - Viral video purportedly shows Steve Jobs’ wife Laurene Powell Jobs while the investigation revealed that the woman is not Apple founder’s wife but Sadhvi Bhagawati Saraswati
Claim : வைரலாகப் பகிரப்படும் சமூக வலைத்தள காணொளி ஒன்று, ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி இவர் எனக் குறிப்பிட்டு கும்பமேளாவில் கலந்துகொண்டதாகக் காணொளி வெளியிட்டுள்ளது
Claimed By : Social Media Users
Claim Reviewed By : Telugupost Fact Check
Claim Source : Social Media
Fact Check : Misleading
Next Story
|