Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: 1330 குறள்களையும் மனப்பாடமாக சொல்லும் மாணவர்களுக்கு ₹25000 பரிசாக அளிக்கின்றது தமிழக அரசு.
Fact: இத்தகவல் தவறானதாகும். ₹15000 மட்டுமே தமிழக அரசு சார்பில் தரப்படுகின்றது.
”நண்பர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான தகவல். திருக்குறளில் உள்ள மொத்தம் 1330 குறளையும் மனப்பாடமாக சொல்லும் ஆற்றல் உடைய மாணவ, மாணவிகள் இருந்தால் தெரியப்படுத்தவும். தமிழ் வளர்ச்சி துறை மூலமாக ரூ.10000/ வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது ரூ.25000/ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. யாரேனும் இருப்பின் தொடர்பு கொள்ளவும்: அலைபேசி 8610609767. உங்களுக்கு தெரிந்த வாட்ஸ்அப் குழுவிலும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். யாருக்காவது பயன்படட்டும்” என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா டைம்ஸ் நவ்?
1330 குறள்களையும் மனப்பாடமாக சொல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு ₹25000 பரிசாக அளிப்பதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
அத்தேடலில் வைரலாகும் இத்தகவலானது கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்தே பரவி வருவதை காண முடிகின்றது.
இதனையடுத்து வைரலாகும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்ணை தொடர்புக் கொண்டோம். எதிர் முனையில் இருந்த அந்நபர் தனக்கு இத்தகவல் குறித்து எதுவும் தெரியாது. சமீபத்தில்தான் இந்த எண்ணை வாங்கினேன் எந்த தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறையில் தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அங்கு பணிபுரியும் சத்தியராஜ் என்பவர் பேசுகையில், 1330 குறள்களையும் மனப்பாடமாக சொல்லும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை கொடுக்கப்படுவது உண்மையே. ஆனால் வைரலாகும் தகவலில் குறிப்பிட்டிருப்பதுபோல் ₹25000 பரிசாக தரப்படுவதில்லை; ₹15000 மட்டுமே தரப்படுகின்றது என தெரிவித்தார். மேலும் இது தொடர்பான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களின் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
Also Read: அயோத்தி ராமர் கோவில் உண்டியலில் பெண் ஒருவர் லட்சக்கணக்கில் பணம் செலுத்தியதாக பரவும் தவறான வீடியோ!
1330 குறள்களையும் மனப்பாடமாக சொல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு ₹25000 பரிசாக அளிப்பதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் ₹15000 மட்டுமே தமிழக அரசு அளிக்கின்றது. இந்த உண்மையை உரிய ஆதாரங்களின் வாயிலாக தெளிவுப்படுத்தியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook Post from the user, @sunrtha, Dated December 06, 2022
Phone Conversation With Sathyaraj, Tamil Valarchi Thurai
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)