schema:text
| - அரச ஊழியரை தாக்கிய அங்கஜன் இராமநாதன் ; உண்மை தெரியுமா ?
INTRO:
அரச ஊழியரை தாக்கிய அங்கஜன் இராமநாதன் என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “பா. உ என்றால் அரச உத்தியோகத்தரை கன்னத்தில் அறையலாமா?
Corrupted Jaffna MP Angajan Ramanathan slapping a government servant. இம் மாதம் 16 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (16.10.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற குறித்த வீடியோவில், நடந்த உரையாடல் குறித்தோ, தாக்குதல் நடந்த இடம் குறித்தோ எந்த தகவலும் குறிப்பிட்டு இருக்கவில்லை.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இவ்வாறு அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக இலங்கையின் பிரதான ஊடகங்களில் எந்த செய்தியும் வெளியாகவில்லை.
ஆகவே நாம் குறித்த வீடியோவில் சில பகுதிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.
குறித்த தேடலின் போது, இது இந்தியாவில் மகாராஷ்டிரா பகுதியில் நடந்த சம்பவம் என கண்டறியப்பட்டது. Swabhimani Shetkari Sanghatana கட்சியின் இளைஞர் அணித்தலைவரான Mayur Borde விவசாயிகளைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி வங்கி மேலாளரை அறைந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.
நாம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் சில கிராம மக்களிடம், குறித்த வீடியோவில் உள்ளவாறு தாக்குதல் நடத்தப்பட்டதா என எமது குழு வினவியது, இதன்போது அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தனர். இந்த வீடியோவில் இலங்கையில் உள்ள எந்த அரசு அதிகாரியோ அல்லது உள்ளூர் ஊழியர்களோ சம்பந்தப்பட்டிருக்கவில்லை என தெரிவித்தனர்.
இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இந்தக் காணொளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், அது இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி என்றும் எமது விசாரணையின் போது உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த வீடியோ தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவதற்காக வேண்டுமென்றே தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும் எனவும் தெரிவித்தார்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அரச ஊழியரை தாக்கிய அங்கஜன் இராமநாதன் என பரவும் வீடியோவில் உண்மைத்தன்மை இல்லை என கண்டறியப்பட்டது.
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
|