schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தலித் சமூகத்தவரை உயர்சாதியினர் தாக்கி மண்டியிட வைத்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
“அரசு வேலையில் இருந்தாலும், தலித்துகள், மேல் வகுப்பினருக்கு அடிமைகளாக வாழ வேண்டும் என்று கூறி தாக்கும் மேல் சாதி வட நாட்டவர். வடவரின் முட்டாள்தனம் மனதை மிகவும் வாட்டி வதைக்கிறது . கேட்பாரற்று கிடக்கும் இந்த ஊமை சமுதாயத்திற்கு உதவியாக இருக்க வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது புரியவில்லை . கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Also Read: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகையையொட்டி குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படமா இது?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தலித் சமூகத்தவரை உயர்சாதியினர் தாக்கி மண்டியிட வைத்ததாக கூறி பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய, அவ்வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து ஆய்வு செய்தோம். இதில் இதே வீடியோ சமாஜ்வாடி கட்சி அதிகாரப்பூர்வ டிவிட்டரில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
வைரலாகும் இந்நிகழ்வு உத்திரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்ததாக இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அடி வாங்குபவர் தலித் என்று எவ்விடத்திலும் இப்பதிவில் குறிப்பிடப்படவில்லை.
இதனையடுத்து உரிய கீ வேர்டுகளை கொண்டு வைரலாகும் நிகழ்வு குறித்து தேடுகையில், ஷாஜஹான்பூர் போலீசார் அவ்ர்களது டிவிட்டர் பக்கத்தில் இச்சம்பவம் குறித்து விளக்கி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. இப்பதிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் இந்நிகழ்வு குறித்து பேசி இருந்தார்.
“பிரதீக் திவாரி மற்றும் வேறு நான்கு பேர் சேர்ந்து ராஜீவ் பரத்வாஜ் என்பவரை தாக்கியுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுளனர், மற்றவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்” என்று சஞ்சய் குமார் பேசியுள்ளார்.
இதனையடுத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமாரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டுகொண்டு பேசினோம். இதில் அடிபட்டவரும் அடி வாங்கியவரும் ஒரே சாதியை சார்ந்தவர்கள் என்பதை சஞ்சய் குமார் தெளிவுப்படுத்தினார். அடிபட்டவர் தலித் சமூகத்தை சார்ந்தவர் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.
இதனடிப்படையில் பார்க்கும்போது தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை உயர்சாதியினர் தாக்கி மண்டியிட வைத்ததாக கூறி பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உணர முடிகின்றது.
Also Read: மும்மொழி கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தியதா தமிழக பள்ளி கல்வித்துறை?
தலித் சமூகத்தவரை உயர்சாதியினர் தாக்கி மண்டியிட வைத்ததாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Source
Tweet shared bySamajwadi Party
Newschecker’s telephonic conversation with Sanjay Kumar, SP City, Shahjahanpur
Tweet shared by Shahjahanpur Police
(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் இந்தியிலும் பிரசுரமாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 22, 2025
Kushel HM
December 13, 2024
Ramkumar Kaliamurthy
December 11, 2024
|