schema:text
| - உண்மை சரிபார்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு இரவில் 3 மாத இலவச மொபைல் ரீசார்ஜ் சலுகை வழங்கியதாக உண்மையா?
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் இலவச 3 மாத ரீசார்ஜ் சலுகை எனத் தவறான தகவலுடன் தீங்கான இணைப்பு பரவுகிறது.
Claim :தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ₹749 மதிப்புள்ள மூன்று மாத மொபைல் ரீசார்ஜை இலவசமாக வழங்குவதாக கூறப்படுகிறது
Fact :தமிழக முதல்வர் இதுபோன்ற எந்த சலுகையும் அறிவிக்கவில்லை. சமூக ஊடகங்களில் பரவும் செய்தியிலுள்ள இணைப்பு தீங்கானதாக குற்றங்களுக்கு வித்திடுவாதாகவும் உள்ளது
சிந்து சமவெளி நாகரிகத்தின் (IVC) எழுத்து கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் மர்மம் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதனை முன்னிட்டு, சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட 100வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த பண்டைய எழுத்தை முடிவுக்குக் கொண்டு வருபவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக அறிவித்தார்.
அதே வேளையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு 2025 கொண்டாட்டத்தை முன்னிட்டு ₹749 மதிப்புள்ள 3 மாத ரீசார்ஜை இலவசமாக வழங்குவதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வேகமாக பரவியுள்ளது.
இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே”
பதிவின் விவரம்:
“ புத்தாண்டு ரீசார்ஜ் சலுகை
புத்தாண்டையொட்டி, மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் ₹749 முற்றிலும் இலவசம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி இப்போதே ரீசார்ஜ் செய்யவும்.
இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே.”
உண்மை சரிபார்ப்பு:
இந்த தகலாய்வில், தெலுங்கு போஸ்ட் உண்மை ஆய்வு குழு, சமூக ஊடகங்களில் பரவும் மூன்று மாத இலவச ரீசார்ஜ் சலுகை குறித்த தகவல் போலியானது என்று தெரியவந்தது.
சமூக ஊடகங்களில் பரவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள URL-ஐ அலசியபோது, அந்த இணையதளத்தை அணுகும்போது பயனர்கள் மூலமாக தகவல் திருடும் முயற்சி நடக்கின்றது என தெரியவந்தது. அந்த டொமைன் (b-cdn.net) நிரந்தரமான சரியான இணைய தளமாகத் தோன்றவில்லை. மேலும், இது இணைய வழி குற்றங்களுள் ஒன்றான பிஷிங்(phishing) அல்லது மால்வேர் (malware) அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு, நாங்கள் கூகுள் தேடலின் மூலம் DT Next என்ற ஆங்கில செய்தித் தளத்தில் ஜனவரி 9, 2025 அன்று வெளியிடப்பட்ட செய்தியை கண்டறிந்தோம். அதில், “புதிய ஆண்டிற்கான ரீசார்ஜ் சலுகை மோசடி” குறித்து தமிழ்நாடு காவல் துறை, பொது அறிவுறுத்தல் வெளியிட்டது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உண்மை ஆய்வு பிரிவின் X தளப் பதிவில் இந்த பொய்ச் செய்தினையும் அதன் விளைவையும் மேற்கோள்காட்டி, பொதுமக்கள் மோசடியைத் தவிர்க்க அந்த தகவலை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
பெருந்திறமை உள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அல்லது தமிழக அரசு 2025 புத்தாண்டில் 3 மாத இலவச ரீசார்ஜ் சலுகை அறிவிக்கவில்லை. எனவே, பரவும் தகவல் தவறானது என்பதுடன், பகிரப்படும் இணைப்புகள் சைபர் குற்றங்களான பிஷிங் மற்றும் மால்வேர் தாக்குதலுக்கான வழியாகும்.
தகவலாய்வின் முடிவில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களோ அல்லது தமிழ்நாடு அரசு சார்பிலோ 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டமாக மூன்று மாத இலவச மொபைல் ரீசார்ஜ் சலுகையை அறிவிக்கவில்லை என்பது உறுதியாகிறது. எனவே இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்று ஆதாரம் அடிப்படையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், சைபர் குற்றமான பிஷிங் தாக்குதல் மூலமாக மால்வேர் பரப்ப இந்த தீங்கான இணைப்பு பயன்படுத்தப்படுகிறது.
இதனை நம்பாமல் அனைவரும் விழிப்புடன் இணைய சேவைகளை பயன் படுத்த வேண்டும்.
|