About: http://data.cimple.eu/claim-review/5ca0d45f5d6e1e2455cf05418ccba569fc1114f6b4c066b2890522da     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check Claim: ஸ்வீடனில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் Fact: வைரலாகும் தகவல் போலியானது என்று விளக்கமளித்துள்ளது ஸ்வீடன். ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி ஸ்வீடனில் நடைபெறவிருப்பதாகவும், உடலுறவை அந்நாடு அதிகாரப்பூர்வ விளையாட்டாக அறிவித்திருப்பதாகவும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. சன் நியூஸ் இந்த நியூஸ்கார்டினை டெலிட் செய்து விட்ட நிலையிலும், சமூக வலைத்தளங்களில் இந்த நியூஸ்கார்டும் மேலும் சில ஊடகங்களில் வெளியான இச்செய்தியும் பரவி வருகிறது. தினத்தந்தி, ABP Nadu மற்றும் மாலைமலரும் இச்செய்தியை வெளியிட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா? ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி ஸ்வீடனில் நடைபெற இருப்பதாகப் பரவிய தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம். முதலாவதாக, முக்கியமான சர்வதேச ஐரோப்பிய செய்தி ஊடகங்களில் இச்செய்தி வந்துள்ளதா என்று தேடியபோது அப்படி எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே, கீவேர்டுகள் மூலமாக இதுகுறித்து தேடினோம். நம்முடைய தேடலில் Goterborgs Posten என்கிற ஸ்வீடன் செய்தி ஊடகம் வெளியிட்டிருந்த கட்டுரை நமக்குக் கிடைத்தது. ஏப்ரல் 26, 2023 அன்று வெளியான இச்செய்தி கட்டுரையில் உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்க கொடுக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. NDTV செய்தியில், “According to the Swedish outlet, there is a Federation of Sex in Sweden and its chief Dragan Bractic called for a championship to be organised…However, the federation’s application to become a member of the National Sports Confederation was denied. Mr Bractic had submitted the application in January this year” என்று விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜனவரி 19, 2023 அன்று வெளியான TV4 என்கிற ஸ்வீடன் செய்தி ஊடகத்தின் கட்டுரையில் அந்நாட்டு தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் BJorn Eriksson, உடலுறவு விளையாட்டாக அங்கீகரிப்படவில்லை; தவறான செய்தி என்று விளக்கமளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் மற்றொரு செய்தியை இங்கே படியுங்கள். இதுதொடர்பாக, நாம் ஸ்வீடன் தேசிய விளையாட்டு கூட்டமைப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, ”ஊடகங்களில் பரவி வரும் இத்தகவல் தவறானது;எந்த செக்ஸ் கூட்டமைப்பும் ஸ்வீடன் விளையாட்டு அமைப்பில் சேரவில்லை. ஸ்வீடனின் பெயரைக் கெடுக்கும் வகையில் இத்தகவல் பரவுகிறது” என்று ஸ்வீடனின் விளையாட்டு கூட்டமைப்பின் ஊடக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் Anna setzman விளக்கமளித்தார். மேலும், இதுதொடர்பாக ஐரோப்பிய செக்ஸ் விளையாட்டு போட்டி தொடர்பாக அறிவித்த கூட்டமைப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது, “Sex is not yet classified as a sport, and that is because of the financial reasons. Sport federation will need to pay for training facilities, referees and referee training and courses. That is a reason why they didn’t accept us. But it is not over. This year they accept e-sport as a sport. Is sitting in front of computer and playing video games more sport than healthy physical activity that prolongs life? We will let you to make your own conclusion. European Championship in Sex exists, and it is starting on June 8th in Sweden. Is it a sport or not… it is not that important. Euro-vision is also a competition, but it is not a sport” என்று மெயிலில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. Also Read: தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறினாரா? ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி ஸ்வீடனில் நடைபெற இருப்பதாகப் பரவிய தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Sources Email from Swedish Sports Confederation Goterbergs-Posten report, April 26, 2023 TV4 report, January 19, 2023 (நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் இச்செய்தி முதலில் வெளியாகியது) (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software