schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியம் திரிணாமுல் காங்கிரஸுக்கு இல்லை என்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இடையே அடிக்கடி உரசல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், ஆளுநர் ஜக்தீப் அரசியலமைப்புச் சட்டத்தில் 174 ஆவது பிரிவு தனக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் மேற்கு வங்க சட்டசபையை முடக்கினார் என்பதாக சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநரின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ”மேற்கு வங்க ஆளுநர் சட்டசபையை முடக்கியிருப்பது, விதிகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானதாக இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவதற்கு மாநிலத்தின் தலைவர் என்ற நிலையிலிருப்பவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால், மேற்கு வங்க ஆளுநரோ மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் அரசு கேட்டுக்கொண்டதால்தான் மேற்கு வங்கத்தில் சட்டசபை முடக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, பிப்ரவரி 13 ஆம் தேதியன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில், “அன்பு சகோதரி மம்தா பானர்ஜி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அரசியலமைப்பை மீறிய ஆளுநர்களின் நடவடிக்கைகள் பற்றியும் தனது கவலையையும் ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றுகூடிச் சந்திக்கலாம் எனவும் அவர் கூறினார். மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கும் உறுதிப்பாட்டினை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன். எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்புக் கூட்டம் விரைவில் நடைபெறும்.” என்று பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், “ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி பதிலடி. ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை. சமூகநீதியில் திரிணாமுல் காங்கிரஸ் பல பணிகளை செய்துள்ளது. திமுக போல் ஒரு குடும்பம் முடிவெடுக்க முடியாது. எங்கள் கட்சி நிர்வாகிகள்தான் முடிவெடுக்க முடியும்” என்று கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முதல்வர் ஸ்டாலின் டீ குடித்த கடைக்காரர் கடையை நிரந்தரமாக மூடியதாக பரவும் வதந்தி!
ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டில் வாக்கிய அமைப்பு ஒழுங்காக இல்லை. மேலும், முற்றுப்புள்ளி சரியான இடங்களில் அமைந்திருக்கவில்லை. வைரல் நியூஸ் கார்டு தந்தி டிவியில் பெயரில் பரவிய நிலையில், இதுகுறித்து தந்தி டிவி டிஜிட்டல் பிரிவைச் சேர்ந்த வினோத்-திடம் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், குறிப்பிட்ட நியூஸ் கார்டு தந்தி டிவியால் வெளியிடப்படவில்லை என்றும், வைரல் நியூஸ் கார்டு போலியானது என்றும் நமக்கு உறுதி செய்தார்.
மேலும், மம்தா பானர்ஜியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பார்வையிட்டபோது கடந்த ஜனவரி 5 ஆம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியதற்கு அவரை ட்வீட்டில் இணைத்து நன்றி தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, ”Respectfully remembering Guru Ravidas ji on his birth anniversary. His teachings are eternal and continue to guide us even today.” என்கிற ட்வீட்டே அவரது பக்கத்தில் சமீபத்தில் இடம் பெற்றுள்ளது.
வைரலாகும் நியூஸ் கார்டில் இருப்பது போன்ற செய்தி எதுவும் இடம்பெறவில்லை. மேலும், முன்னணி ஊடகங்களிலும் அதுபோன்ற செய்தி எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி அமைப்பில் சேர வேண்டிய அவசியமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Thanthi Tv Digital Team
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 5, 2025
|