schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து விலகிய சாக்ஷி மாலிக்
Fact: வைரலாகும் செய்தி ஒரு வதந்தியாகும். இதனை சாக்ஷி மாலிக் உறுதி செய்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.
“மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இருந்து விலகிய சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டு வடக்கு ரயில்வேயில் தனது பணியை தொடங்கினார் சாக்ஷி மாலிக்” என்று தந்தி டிவி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ரயில் விபத்துகளை தடுப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதாக பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகிய நிலையில் அவருடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம்.
நம்முடைய ஆய்வில், அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ”This news is completely wrong. In the fight for justice, none of us has backed down, nor will we. Along with Satyagraha, I am fulfilling my responsibility in Railways. Our fight continues till justice is served. Please don’t spread any wrong news.” என்று பதிவிட்டிருப்பதை நம்மால் அறிய முடிந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ் ஊடகங்களில் பலவும் சாக்ஷி மாலிக் போராட்டத்தை கைவிட்டார் என்று வெளியான தங்களுடைய செய்தியை டெலிட் செய்திருந்தன.
தொடர்ந்து, பஜ்ரங் புனியாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் தேடியபோது, “ நாங்கள் போராட்டத்தை கைவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. எங்கள் மீதான தாக்குதலாகவே இந்த வதந்தியை பார்க்கிறோம். நாங்கள் போராட்டத்தை கைவிடவோ, விலகவோ இல்லை. நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்” என்று பதிவிட்டிருந்தார்.
எனவே, சாக்ஷி மாலிக் போராட்டத்தைக் கைவிட்டதாகப் பரவும் தகவல் போலியானது என்று இதன்மூலமாகத் தெளிவாகிறது.
Also Read: பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று பரவும் பழைய புகைப்படம்!
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியதாக பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Twitter Post From, Sakshee Malikkh, Dated June 05, 2023
Twitter Post From, Bajrang Punia, Dated June 05, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 20, 2023
Vijayalakshmi Balasubramaniyan
May 29, 2023
Ramkumar Kaliamurthy
May 1, 2023
|