schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Coronavirus
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்காக 6000 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டாவது பெரிய கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்றினை 45 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கியுள்ளது என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்தியாவின் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. தலைநகர் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பால் அவதியுறுபவர்கள் எண்ணிக்கையும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. தமிழகத்திலும் தற்போது தினசரி கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், இந்தூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 6000 படுக்கை வசதி கொண்ட இரண்டாவது பெரிய கொரோனா சிறப்பு மருத்துவமனை ஒன்றினை சத்தமில்லாமல் அமைத்துள்ளது என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, வைரலாகும் தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சத்தமின்றி 6000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றினை அமைத்ததாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
மேலும், குறிப்பிட்ட புகைப்படத்தில் இரண்டு கட்டிட அமைப்புகள் இணைக்கப்பட்டு இரு வேறு பதிவுகள் வைரலாவதால் இரண்டு புகைப்படங்களையுமே ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
இதில், அதிகளவில் ஷேர் செய்யப்பட்ட புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கட்டிடம் உண்மையில் இந்தூரில் அமைந்திருந்தாலும் அது ராதா ஸ்வாமி சத்சங் என்கிற ஆன்மீக அமைப்பிற்கு சொந்தமானது. அவர்களுடைய இணையதளத்திலேயே அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முதல் நடவடிக்கையாக கொரோனா நோயின் தாக்கம் அதிகமில்லாத நோயாளிகளுக்காக இங்கே 600 படுக்கைகள் வரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 2000 முதல் 6000 படுக்கைகள் வரை அமைக்கமுடியும் என்கிற செய்தியும் பல முன்னணி செய்தித்தளங்களால் பகிரப்பட்டுள்ளது.
மேலும், பரவுகின்ற அப்புகைப்படத்தில் ‘மா அகில்யா’ கோவிட் கேர் சென்டர் என்று எழுதப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.பி என்பது ராதா ஸ்வாமி சத்சங் பீஸ் என்பதன் பெயர் சுருக்கமே தவிர ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அல்ல.
தொடர்ந்து பரவுகின்ற மற்றொரு புகைப்படத்தில் பகிரப்படும் கட்டிட அமைப்பானது கதார் நாட்டில் அமைந்துள்ள அல் பைத் விளையாட்டு மைதானத்தின் புகைப்படம். பிபா உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள மைதானம் இது. அதுகுறித்த செய்தியை இங்கே படிக்கலாம்.
இதுகுறித்த செய்திகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே, இங்கே படிக்கலாம்.
ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய கொரோனா மருத்துவமனை என்று பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Knock Sense: https://www.knocksense.com/indore-city/new-covid-care-centre-to-be-set-up-in-indores-radha-soami-satsang-beas-campus
Hindustan Times: https://www.hindustantimes.com/cities/indore-news/indore-set-to-have-one-more-covid-19-care-centre-amid-rising-infections-101618316871650.html
India TV: https://www.youtube.com/watch?v=bFCB_8lBYEY
TOI: https://timesofindia.indiatimes.com/city/indore/trial-run-at-largest-covid-19-care-centre-in-indore/articleshow/82200770.cms
ANI:https://www.aninews.in/news/national/general-news/madhya-pradeshs-largest-covid-19-care-centre-starts-functioning-in-indore20210422233936/
ET: https://economictimes.indiatimes.com/news/india/madhya-pradesh-indores-radha-soami-satsang-beas-ground-to-be-converted-into-covid-care-centre/videoshow/82062536.cms
Qatar Tribune: https://www.qatar-tribune.com/news-details/id/168855/al-bayt-stadium-comes-to-life?fbclid=IwAR2tmSgur80N3hABIi1o9RS1Bke61Gm7fGdfeiwVL6aB6y8vfcra_WM-SFo
Live Mint: https://www.livemint.com/news/india/indore-covid-care-centre-to-be-set-up-at-radha-soami-satsang-beas-premises-11618370836242.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 29, 2025
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 11, 2025
|