schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய முஸ்லீம் பெண்கள் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வருகின்ற இந்த வீடியோவின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவிட்டாரா முதல்வர் ஸ்டாலின்?
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய ஒருவரை காப்பாற்றும் துணிச்சலான முஸ்லீம் பெண்கள் என்கிற பதிவுடன் கூடிய வீடியோ ஒன்றை கடந்த மே மாதம் 4 ஆம் தேதியன்று ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார். இப்பதிவினை இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பகிர்ந்து வருகின்ற நிலையில் அவ்வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அந்த ஆய்வில், குறிப்பிட்ட வீடியோ குறித்த பதிவு தவறானது; வீடியோ உண்மையாக நடந்த சம்பவத்தின் பதிவு அல்ல என்பதை நாம் அறிய முடிந்தது.
குறிப்பிட்ட வீடியோவில், ஒருவர் மொபைல்போனில் பேசிக்கொண்டே மின்கம்பத்தின் அடியில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, திடீரென்று பக்கத்தில் அமைந்துள்ள மின்சார கம்பத்தில் விழும் அவர் மீது மின்சாரம் பாய்கிறது. அப்போது, அவ்வழியாக வந்த பர்தா அணிந்த பெண்கள் சிலர் அவரைக் காப்பாற்றுவதாக அந்த வீடியோ பதிவாகியுள்ளது.
குறிப்பிட்ட வீடியோவை ஆராய்ந்து பார்த்தபோது அதில் பங்கேற்ற நபர்களின் செயல்பாடுகள் இயல்பாக இல்லாமல் இருப்பதை நம்மால் கண்டறிய முடிந்தது. மேலும், குறிப்பிட்ட வீடியோவின் இறுதியில், “கற்பனையாக உருவாக்கப்பட்ட இந்த வீடியோ காட்சியானது மக்களிடையே நடைமுறை வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இக்காட்சியில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்கள் முழுக்க முழுக்க விழிப்புணர்வுக்கானவை மட்டுமே” என்று ஆங்கிலத்தில் விளக்கமளித்துள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட வீடியோ போன்றே கடந்த டிசம்பர், 2021 ஆம் ஆண்டு மொபைல் போனை சார்ஜ் செய்து கொண்டே பேசிய மனிதர் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்ததாக பரவிய வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து நம்முடைய நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஆய்வறிந்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: ஐஸ்லாந்து பெண்களை மணக்கும் வெளிநாட்டவருக்கு மாதம் 3.5 லட்சம் வழங்குகின்றதா ஐஸ்லாந்து அரசு?
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய முஸ்லீம் பெண்கள் என்பதாக சமூக வலைத்தளங்களில் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது என்பதை இங்கே விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post from Strange & Funny Facts, Dated 05/05/2022
NewsChecker English post , Dated 27/12/2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
July 3, 2024
|