schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
இந்து பண்டிட் ஒருவர் தனது 62 வயதில் தன்னுடைய சொந்த மகளையே திருமணம் செய்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவுகிறது.
”இந்து கடவுள் பிரம்மன், தன் சொந்த மகளான சரஸ்வதியை திருமணம் செய்தது போல் தானும் தன் சொந்த மகளை திருமணம் செய்ததாக தெரிவித்தார் பிராமண பண்டிட்” என்பதாகப் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கழுதைப்புலி சீமான்போல ‘புஹாஹாஹா..’ என சிரிப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டதா?
இந்து பண்டிட் ஒருவர் தனது 62 வயதில் தன்னுடைய சொந்த மகளையே திருமணம் செய்ததாகப் பரவுகின்ற தகவல் வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்தோம்.
குறிப்பிட்ட வைரல் புகைப்படம் “Troll” என்கிற ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. குறிப்பிட்ட இந்த திருமணப் புகைப்படம் அப்பக்கத்தில் கடந்த டிசம்பர் 25, 2022 அன்று பதிவிடப்பட்டுள்ளது. அதன் கீழேயே, Troll அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
குறிப்பிட்ட வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷாட் ஒன்றினை எடுத்து நாம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் தேடலுக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், Techparesh என்கிற இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது நமக்குக் கிடைத்தது. அவர்களுடைய பரேஷ் சத்தாலியா (Paresh Sathaliya) என்கிற யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ காணக்கிடைத்தது.
தொடர்ந்து, அவர்களுடைய சமூக வலைத்தளப் பக்கத்தை ஆராய்ந்தபோது வயதுக்கு மீறிய திருமணங்கள் குறித்த இதுபோன்ற பல்வேறு வீடியோக்கள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள இளைஞர் – வயதான பெண்மணி திருமணம் குறித்த உண்மைச் சோதனையை ஏற்கனவே நாம் நம்முடைய நியூஸ்செக்கர் இந்தியில் வெளியிட்டுள்ளோம். குறிப்பிட்ட வீடியோவில் இருக்கும் பெண், வேறு சில வீடியோக்களிலும் நடித்துள்ளார்.
இதிலிருந்து, குறிப்பிட்ட சமூக வலைத்தளப் பக்கமே இதுபோன்ற ஸ்க்ரிப்டட் வீடியோக்களை பதிவு செய்யக்கூடியது என்பது நமக்கு உறுதியானது.
மேலும், கரண் கொட்னலா என்கிற ஆய்வு செய்யப்பட்ட யூடியூப் பக்கம் ஒன்றிலும் இந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில் பதிவிடப்பட்டுள்ள முழுமையான வீடியோவின் இறுதியில் “Entertainment purposes only” என்கிற அறிவிப்பு காணக்கிடைக்கிறது.
Also Read: 2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக இடம் பிடித்துள்ளதா இந்திய ரூபாய்? உண்மை என்ன?
இந்து பண்டிட் ஒருவர் தனது 62 வயதில் தன்னுடைய சொந்த மகளையே திருமணம் செய்ததாகப் பரவுகின்ற தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram post, From techparesh, Dated December 17, 2022
YouTube post, From Karan Kotnala, Dated December 20, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
January 17, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 16, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 7, 2025
|