Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடையை சுத்தம் செய்தார் பில்கேட்ஸ்
Fact: உண்மையில் பில்கேட்ஸ் பிரஸ்ஸல்ஸ் நகரின் கழிவுநீர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இதை வைத்தே இத்தகவல் பரப்பப்படுகின்றது.
“உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடைக்குள் நுழைந்து தான் சுத்தம் செய்த வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ்” என்று குறிப்பிட்டு தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
இச்செய்தியை பலரும் பகிர்ந்து இதுக்குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை இலவசமாக தருகின்றதா மத்திய அரசு?
கழிப்பறை தினத்தை முன்னிட்டு பில்கேட்ஸ் சாக்கடையை சுத்தம் செய்ததாக தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் “I explored the hidden history of Brussels’ sewage system—and the role of wastewater in global health—for this year‘s #WorldToiletDay” என்று தலைப்பிட்டு பில்கேட்ஸ் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
பில்கேட்ஸ் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரத்திலிருக்கும் கழிவுநீர் அருங்காட்சியத்திற்கு சென்று, அங்கு கழிவு நீர் எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகின்றது என்பது குறித்து ஆவண வீடியோவாக இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து தேடுகையில் ஊடகங்களிலும் இதுக்குறித்த செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதனடிப்படையில் பார்க்கையில் பில்கேட்ஸ் பிரஸ்ஸல்ஸ் நகரின் கழிவுநீர் அருங்காட்சியகத்திற்கு சென்றதை, சாக்கடைக்குள் நுழைந்து சாக்கடையை சுத்தம் செய்ததாக தவறான செய்தியை தினமலர் வெளியிட்டுள்ளது என தெளிவாகின்றது.
Also Read: ஆஸ்திரேலியாவின் வெற்றி இந்திய கிரிக்கெட் மாபியாவிற்கு எதிரான வெற்றி என்றாரா ரிக்கி பாண்டிங்?
கழிப்பறை தினத்தை முன்னிட்டு பில்கேட்ஸ் சாக்கடையை சுத்தம் செய்ததாக தினமலர் வெளியிட்ட செய்தி தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Instagram Video from Bill Gates, Dated November 19, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)