Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: 2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி லேப்டாப் திட்டம்
Fact: இத்தகவல் பொய்யானது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் என்பதாக தகவல் ஒன்று வாட்ஸ்ஆப்பில் பரவி வருவதை தொடர்ந்து, வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ் ஆப் ஹெல்ப்லைன் எண்ணில் (9999499044) இதுகுறித்து நம்மிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
வைரலாகும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,
இத்தகவலானது வாட்ஸ்ஆப் தவிர்த்து எக்ஸ், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருவதை காண முடிந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தேர்தல் முடிந்ததும் மதுரவாயல் கோயில் இடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?
2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் என்று பரவும் தகவலுடன் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியை கிளிக் செய்கையில் அது போலியான அல்லது ஆபத்தான இணையத்தளம் என்று எச்சரிக்கை நமக்கு கிடைத்தது.
தொடர்ந்து அந்த தளத்தில் நுழைந்தபோது அதில் பெயர், கல்வித்தகுதி உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தப்பின் இந்த தகவலை வாட்ஸ்ஆப்பில் 15 நண்பர்கள் அல்லது 5 குழுக்களுடன் பகிந்தால் உங்களுக்கு லேப்டாக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி பார்க்கையில் வைரலாகும் தகவல் போலியானது என அறிய முடிகின்றது.
தொடர்ந்து தேடுகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவும் (AICTE – All India Council For Technical Education) இத்தகவல் பொய்யானது என்று மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அரசு தரப்பிலிருந்து இலவச மடிக்கணிணி தரப்படுவதாக பரப்பப்படும் இந்த பொய் தகவலானது ஒவ்வொரு வருடமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. அவ்வாறு பரவிய தகவல்களை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து, அது பொய்யான தகவல் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளோம். அச்செய்திகளை கீழே காணலாம்.
Also Read: வேலை இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதை கழிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை என்றாரா ராகுல் காந்தி?
2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் என்று பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Press Release from AICTE
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)