schema:text
| - Fact Check: பங்கஜ் திரிபாதி பாஜகவை கேலி செய்யவில்லை, போலியான கூற்றுடன் எடிட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகிறது
விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், இந்தக் கூற்று பொய்யானது என்று கண்டறிந்தது. ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி வீடியோ மாற்றப்பட்டுள்ளது. அசல் வீடியோ, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) பிரச்சாரத்தின் வீடியோவாகும். இதில் பங்கஜ் திரிபாதியின் குரலுடன் செயற்கை ஆடியோ மற்றும் திரிக்கப்பட்ட காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
- By: Sharad Prakash Asthana
- Published: Dec 16, 2024 at 12:56 PM
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதான கூற்றுடன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விஷ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், இந்தக் கூற்று பொய்யானது என்று கண்டறிந்தது. ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி வீடியோ மாற்றப்பட்டுள்ளது. அசல் வீடியோ, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) பிரச்சாரத்தின் வீடியோவாகும். இதில் பங்கஜ் திரிபாதியின் குரலுடன் செயற்கை ஆடியோ மற்றும் திரிக்கப்பட்ட காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
வைரலான பதிவு என்ன?
இந்த வீடியோ ஆம் ஆத்மி கட்சியின் உத்தரபிரதேசத்தின் எக்ஸ் ஹேண்டிலில் இருந்து (ஆர்க்கைவ் லின்க்) வெளியிடப்பட்டுள்ளது.
எக்ஸ் பயனர் ‘சாக்ஷி குப்தா AAP’-ம் இந்த வீடியோவை (ஆர்க்கைவ் லின்க்) இதே போன்ற கூற்றுகளுடன் பகிர்ந்துள்ளார்.
ஃபேஸ்புக் பயனர் ஹமேந்தர் காகத்-ம் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் (ஆர்க்கைவ் லின்க்).
விசாரணை
வைரல் கூற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து, கூகுள் லென்ஸைப் பயன்படுத்தி தேடினோம். எங்கள் விசாரணையானது செப்டம்பர் 25, 2024 அன்று AFAQS இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கைக்கு எங்களை அழைத்துச் சென்றது. அந்த அறிக்கையில் பங்கஜ் திரிபாதி போலி லாட்டரி இணைப்புகளுக்கு இரையாக வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதை காண முடிகிறது. அறிக்கையின்படி, ஆன்லைன் மோசடிக்கு எதிராக ‘மேய்ன் ஃபூல் நஹி ஹூன்’ என்ற புதிய பிரச்சாரத்தை யுபிஐ தொடங்கியுள்ளது, இதில் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். அசல் வீடியோவில், அவர் மோசடிகளைத் தவிர்க்க மக்களுக்கு அறிவுறுத்துவதைக் காண முடிகிறது, அதே நேரத்தில் வைரலான வீடியோ பாஜக தேர்தல் சின்னத்தைக் காண்பிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளது.
Chalaega (சலேகா)-ன் யூடியூப் சேனலிலும் இந்த வீடியோ உள்ளது. இதில், போலி லாட்டரி லின்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று பங்கஜ் திரிபாதி பார்வையாளர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
அதே வீடியோ, யுபிஐ-ன் எக்ஸ் ஹேண்டிலிலிருந்தும் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது அதில், “ஒரு கடலை விற்பனையாளர் லாட்டரி வென்றதாகக் கூறி ஒரு செய்தியைப் பெறுகிறார், மேலும் அவர் தனது பரிசுத் தொகையைப் பெற லின்க்கை கிளிக் செய்ய வேண்டும். அவர் ஆர்வத்தில் விழுவாரா, அல்லது ஒரு புத்திசாலித்தனமான தீர்வைக் கண்டுபிடிப்பாரா? என்ன நடக்கிறது என்பதை அறிய முழு வீடியோவைப் பாருங்கள்.” என்கிற வரிகளும் உள்ளன.
NPCI வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, டிஜிட்டல் கட்டணச் சேவைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தச் செய்யவும் மோசடியைத் தடுப்பதற்கும் யுபிஐ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமான ‘Main Fool Nahi Hoon’-ஐ NPCI அறிமுகப்படுத்தியுள்ளது. பிரச்சாரத்தின் பிராண்ட் அம்பாசிடரான பங்கஜ் திரிபாதி, தொடர்ச்சியாக ஆறு விளம்பரப் படங்களில் நடிப்பார்.
வைரலான வீடியோ எடிட் செய்யப்பட்டிருப்பதை இது உறுதி செய்தது. மேலும் சரிபார்ப்புக்கு, ஏஐ கண்டறிதல் கருவியான True Media ஐப் பயன்படுத்தி அதன் ஆடியோவைச் சரிபார்த்தோம், இது வீடியோவில் உள்ள சாத்தியமான ஏஐ பயன்பாட்டைக் காட்டியது.
வைரலான வீடியோவை ஆய்வு செய்ய எங்கள் கூட்டாளர் DAU (MCA-ன் முயற்சி) உடன் நாங்கள் இணைந்து செயல்பட்டோம். DAU-ன் நிபுணர் குழு வீடியோவை பகுப்பாய்வு செய்ய பல கருவிகளைப் பயன்படுத்தியது.
ஹியா (Hiya) கருவியும் ஆடியோவின் ஏஐ கையாளுதலின் சாத்தியத்தை வெளிப்படுத்தியது.
இருப்பினும், Hive AI-ன் பகுப்பாய்வு வீடியோவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டவில்லை. வைரலான வீடியோவில் காட்சிகள் சிறிது மாற்றப்பட்டு, பாஜக தேர்தல் சின்னம் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழ்ந்த பார்வைக்காக மும்பையில் உள்ள மூத்த பொழுதுபோக்கு பத்திரிகையாளர் பராக் சாபேகரை அணுகினோம். அவர் கூறுகையில் ”இது குறித்து பங்கஜ் திரிபாதியிடம் பேசினேன். அவர் அதை ஒரு ‘டீப் ஃபேக்’ என்று அழைத்தார்” என்று கூறினார்.
முடிவு: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பங்கஜ் திரிபாதி பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வதாகக் கூறும் வீடியோ போலியானது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தற்போது நடைபெற்று வரும் ‘மெயின் ஃபூல் நஹி ஹூன்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அசல் வீடியோ உள்ளது. அந்த வீடியோ தில்லுமுல்லு செய்யப்பட்டு, பொய்யான கூற்றுகளுடன் பரப்பப்பட்டு வருகிறது.
- Claim Review : பங்கஜ் திரிபாதி பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
- Claimed By : பயனர்- ஆம் ஆத்மி கட்சி, உத்தரப்பிரதேசம்
- Fact Check : False
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
|