schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: பிரதமரை வரவேற்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை இழிவாக பேசினார் திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா
Fact: வைரலாகும் வீடியோ 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வந்த பழைய வீடியோவாகும். தமிழன் பிரசன்னா பேசியது ஸ்டாலின் குறித்து அல்ல; அச்சமயத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் குறித்து ஆகும்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். அவரை திருச்சி விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
இந்நிலையில் ஸ்டாலின் பிரதமரை நேரில் சென்று வரவேற்றதை எதிர்க்கும் விதமாக திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பே பற்றி எரியும் உபி ரயில் நிலையம் எனப்பரவும் வீடியோ உண்மையா?
பிரதமரை வரவேற்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா இழிவாக பேசியதாக பரப்பப்படும் வீடியோவில், “இவர்கள் இரண்டு பேரும் அமித் ஷாவின் காலை நக்கி குடிப்பதற்காக பொக்கே (மலர் செண்டு) தூக்கிட்டு போய் ஏர்போர்ட் வாசலில்…” என்று தமிழன் பிரசன்னா பேசுவதை கேட்க முடிந்தது.
இதை வைத்து பார்க்கையில் அமித் ஷாவை பார்க்க சென்ற இருவரை குறித்துதான் அவர் பேசுகின்றார் என்பதையும், பிரதமர் மோடியை பார்க்க சென்ற ஸ்டாலினை குறித்து அவர் பேசவில்லை என்பதையும் உணர முடிந்தது.
இதனை உறுதிப்படுத்த வைரலாகும் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடினோம். இத்தேடலில் “seeman meets sasikala on jayalalitha birthday – it’s a shame- tamilan prasanna takes on seeman” என்று தலைப்பிட்டு ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலானது பிப்ரவரி 24, 2021 அன்று வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தை கண்டறிய முடிந்தது.
இந்த வீடியோவில் 23:50 நேரத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் பகுதி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. அதில் அக்காலக்கட்டத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுகவின் தலைவர்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் குறித்தே பிரசன்னா இவ்வாறு பேசியுள்ளார் என்பதை தெளிவாக அறிய முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களிலும் தமிழன் பிரசன்னாவின் இந்த பேச்சு இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. அவற்றை ஆய்வு செய்கையிலும் பிரசன்னா எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் குறித்தே பேசியுள்ளார்; மு.க.ஸ்டாலின் குறித்து அல்ல என்பது உறுதியாகின்றது. மற்ற ஊடகங்களில் வந்த பேச்சை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்றாரா மு.க.ஸ்டாலின்?
பிரதமரை வரவேற்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா இழிவாக பேசியதாக பரப்பப்படும் வீடியோவானது 2021 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி பொறுப்பில் இந்தபோது வெளிவந்த பழைய வீடியோவாகும். உண்மையில் அவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் குறித்தே பேசியுள்ளாரேயொழிய, மு.க.ஸ்டாலின் குறித்து அல்ல.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video from Red Pix 24X7, Dated Feb 24, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 28, 2024
Ramkumar Kaliamurthy
November 10, 2021
Vijayalakshmi Balasubramaniyan
August 29, 2024
|