schema:text
| - Fact Check: பாகிஸ்தானில் நடந்த பேருந்து விபத்து குறித்த வைரல் காணொளி, மகா கும்பமேளாவுடன் போலியாக இணைக்கப்பட்டுள்ளது
உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றான மகா கும்பமேளா தற்போது பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது.
By: Pallavi Mishra
-
Published: Feb 6, 2025 at 06:22 PM
-
புது தில்லி (விஷ்வாஸ் நியூஸ்). உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றான மகா கும்பமேளா தற்போது பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டம் உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான யாத்ரீகர்கள், துறவிகள் மற்றும் ஆன்மீகத் தேடல் கொண்டவர்களை ஈர்க்கிறது. சமீபத்தில், ஒரு பேருந்து வடிகாலில் விழுந்து அங்கு கூட்டம் சூழ்ந்திருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மகா கும்பமேளாவிற்குச் சென்று கொண்டிருந்த பேருந்து வடிகாலில் விழுந்து 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் வீடியோவாக இது பகிரப்பட்டுள்ளது.
விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. இந்த காணொளி பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல, மாறாக பாகிஸ்தானிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
வைரல் ஆவது என்ன?
‘பிராம் சோப்ரா’ என்ற ஃபேஸ்புக் பயனர், இந்த வைரல் காணொளியை (ஆர்க்கைவ் லின்க்) பகிர்ந்துள்ளார், இது “மகா கும்பமேளாவுக்குச் செல்லும் பேருந்து டிரைனில் விழுந்தது” என்ற தலைப்புடன் மகா கும்பமேளா பிரயாக்ராஜில் இருந்து வந்தது எனக் கூறியுள்ளார்.
விசாரணை
ஒரிஜினல் மூல ஆதார வீடியோவைக் கண்டறிய ரிவர்ஸ் இமேஜ் தேடலை நடத்தினோம் அப்போது ‘டாக்டர் அல்தாஃப் பலோச்’ என்ற பெயரில் உள்ள யூடியூப் சேனலில் நவம்பர் 3, 2024 அன்று பதிவேற்றப்பட்ட இந்த காணொளியைக் கண்டறிந்தோம், இந்த வீடியோவானது “ராய்விந்த் தப்லிகி ஜமாஅத்திலிருந்து திரும்பும் போது பயணிகள் பேருந்து வடிகாலில் விழுந்தது” என்ற தலைப்புடன் இருந்தது.
“ரெய்விண்ட்: ஒரு கூட்டத்தில் இருந்து திரும்பும் போது ஒரு பேருந்து டிரைனில் விழுந்தது” என்ற தலைப்புடன், நவம்பர் 4, 2024 அன்று ‘மிஷன் சலீம் காத்ரி 92’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட இந்த காணொளியையும் நாங்கள் கண்டோம்.
ஹம் நியூஸ் ‘ இன் யூடியூப் சேனலில் , “தப்லிகி இஜ்தேமாவின் சமீபத்திய செய்திகள் – லாகூரில் பேருந்து வடிகால் ஒன்றில் விழுந்தது” என்ற தலைப்புடன் இருந்தது.
இந்த சம்பவம் குறித்து நவம்பர் 3, 2024 அன்று ‘ஆஜ் டிவி அஃபீஷியல்’ யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட செய்திகளிலும் இந்த வைரல் ஃபூட்டேஜை காண முடிகிறது. இந்த அறிக்கையும் இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்தது என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் செய்தி சேனலான ‘நியூஸ் 24 எச்டி’யின் நிருபர் முகமது கம்ரானை நாங்கள் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “இந்த வீடியோ நவம்பர் 3, 2024 அன்று எடுக்கப்பட்டது, அப்போது 70 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ரைவிந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தப்லீக் இஜ்தேமாவுக்குப் பிறகு கோட் அட்டு நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தது. பயணத்தின் போது, பேருந்து சக்கரம் வழுக்கி விழுந்ததால், பேருந்து டிரைன் ஒன்றிற்குள் விழுந்தது. சுமார் 30 பேர் காயமடைந்தனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக, விபத்தில் யாரும் உயிர் இழக்கவில்லை.” என்று உறுதிப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, பிரயாக்ராஜுக்குச் செல்லும் ஏதேனும் பேருந்து இதேபோன்ற விபத்தில் சிக்கியுள்ளதா என்பதைச் சரிபார்க்க நாங்கள் ஒரு முக்கிய வார்த்தை தேடலை மேற்கொண்டோம். சமீபத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்பிய பேருந்து ஒன்று நாசிக்-குஜராத் நெடுஞ்சாலையில் , விபத்துக்குள்ளானதாகவும், அதில் ஏழு பேர் உயிரிழந்ததாகவும் எங்களுக்குத் தெரியவந்தது. இருப்பினும், வைரலாகும் வீடியோ அந்த சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல.
இந்த வைரல் காணொளியைப் பகிர்ந்த ஃபேஸ்புக் பயனர் பிரம் சோப்ராவுக்கு ஃபேஸ்புக்கில் 8000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
முடிவு: விஷ்வாஸ் நியூஸின் விசாரணையில், இந்த காணொளி பாகிஸ்தானிலிருந்து வந்தது என்பதும், ரைவிந்த் தப்லிகி இஜ்தேமாவிலிருந்து திரும்பி வரும் போது ஒரு பேருந்து வடிகால் ஒன்றில் விழுந்தது என்பதும் தெரியவருகிறது. மேலும் இது பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுடன் தொடர்புடையது அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.
Claim Review : பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவிற்குச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து, வடிகாலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
Claimed By : Facebook user ‘Pram Chopra’
-
Fact Check : False
-
Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know!
Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
|