schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: கைதானவுடன் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்த மல்யுத்த வீரர்கள்.
Fact: வைரலாகும் புகைப்படம் போலியாக AI மூலமாக எடிட் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கைதான மல்யுத்த வீரர்கள் காவல்துறை வாகனத்திற்குள் ஏற்றப்பட்டவுடன் சிரித்துக் கொண்டே செல்ஃபி எடுத்துக்கொண்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் காவல்துறை வாகனத்திற்குள் ஏற்றப்பட்டவுடன் சிரித்துக் கொண்டே செல்பி எடுத்துக்கொண்டதாகப் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, சங்கி பிரின்ஸ் உட்பட பலரும் இப்புகைப்படத்தை ஷேர் செய்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் செய்வதாக நடிப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
டெல்லியில் கைதான மல்யுத்த வீரர்கள் காவல்துறை வாகனத்திற்குள் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்துக்கொண்டதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
நம்முடைய தேடலில், டெல்லியில் போராட்டத்திற்கு பின்னர் மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட புகைப்படங்களை The Tribune உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. Tribune வெளியிட்டுள்ள வினேஷ் போஹத் மற்றும் சங்கீதா போஹத் மற்றும் பிற வீரர்கள் உள்ள வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அப்புகைப்படத்தில் அவர்கள் யாரும் சிரித்தபடி புகைப்படம் எடுத்திருக்கவில்லை.
பத்திரிக்கையாளர் மன் தீப் புனியா என்பவர், மல்யுத்த வீரர்களின் உண்மையான புகைப்படத்தை அவர்கள் சிரிப்பதாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் வைரலாவதற்கு முன்பாகவே பகிர்ந்துள்ளார்.
மேலும், வைரல் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பற்கள் மற்றும் கன்னக்குழியானது புகைப்படத்தை விட மிகத்துல்லியமாக அமைந்திருந்தது.
வினேஷ் போஹத் மற்றும் சங்கீதா போஹத்தின் வேறு சில புகைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் அவர்களுடைய சிரிப்பை வைரல் புகைப்படத்துடன் இங்கே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.
தொடர்ந்து, மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் காவல்துறை வாகனத்தில் சிரித்தப்படி செல்ஃபி எடுத்ததாகப் பரவும் புகைப்படத்தையும், அதன் உண்மையான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ள போராட்டக்களத்தில் ஒருவரான மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ”IT Cell people are spreading this false picture. We make it clear that a complaint will be filed against whoever posts this fake picture,” என்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு, வினேஷ் போஹத், சங்கீதா போஹத் ஆகியோருடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
மேலும், APF நிறுவன ஊடகவியலாளரான Uzair Rizvi, AI எடிட் அப்ளிகேஷனான Faceapp மூலமாக மல்யுத்த வீராங்கனைகளின் முகத்தில் சிரிப்பு எவ்வாறு எடிட் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தாரா?
டெல்லியில் கைதான மல்யுத்த வீரர்கள் காவல்துறை வாகனத்திற்குள் சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுத்துக்கொண்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகிறது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Twitter Post From, Bajrang Punia, Dated May 28, 2023
News Report From, The Tribune, Dated May 28,2023
Twitter Post From, Uzair Rizvi, Dated May 28, 2023
Twitter Post From, Mandeep Punia, Dated May 28, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
May 13, 2024
Vijayalakshmi Balasubramaniyan
March 21, 2024
Vijayalakshmi Balasubramaniyan
February 19, 2024
|