Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Politics
கடன் ஏய்ப்பு குற்றவாளியான தொழிலதிபர் விஜய் மல்லையா பாஜகவுக்கு 2016 ஆம் ஆண்டு 35 கோடி நிதியாக கொடுத்ததாகக் கூறி காசோலை ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் வெற்றியைப் பெற கடுமையாக உழைத்து வருகின்றார்கள்.
இது ஒருபுறமிருக்க, மற்றொரு புறத்தில் ஒவ்வொரு கட்சியையும் மற்றும் கட்சியினரையும் குறித்து பல விதமான பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. இவற்றை நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து, அவற்றின் உண்மைத்தன்மை குறித்து வாசகர்களாகிய உங்களுக்கு தொடர்ந்து விளக்கி வருகின்றோம்.
இவ்வரிசையில் தற்போது 2016 ஆம் ஆண்டு விஜய் மல்லையா பாஜகவுக்கு 35 கோடி ரூபாயை நிதியாக கொடுத்ததாகக் கூறி காசோலை ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.ph/jldkd
Archive Link: https://archive.ph/684DD
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
விஜய் மல்லையா பாஜகவுக்கு ரூ.35 கோடி நிதியாக அளித்ததாகக் கூறி பரப்பப்படும் காசோலையை கூர்மையாக ஆராய்ந்தோம். இந்த ஆய்வில் வைரலாகும் காசோலை போலியான ஒன்று என்பது நமக்கு நிரூபணமானது.
கீழ்க்காணும் தரவுகளின் அடிப்படையிலேயே வைரலாகும் காசோலை போலியானது என நாங்கள் உறுதி செய்தோம்.
தரவு 1: வைரலாகும் காசோலையில், பாஜகவின் பெயரில் எழுத்துப்பிழை உள்ளது. Bharatiya Janata Party என்பதற்கு பதிலாக Bhartiya Janta Party என்று எழுதப்பட்டுள்ளது.
தரவு 2: காசோலையில் இருக்கும் விஜய் மல்லையாவின் கையெழுத்து விஜய் மல்லையாவின் கையெழுத்தே கிடையாது . அது போலியானதாகும்.
விஜய் மல்லையாவின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அவர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பதிவிட்ட்டுள்ளார்.
இக்கடிதத்தில் உள்ள கையெழுத்து வைரலாகும் கடிதத்தில் இருக்கும் கையெழுத்தோடு ஒத்துபோகவில்லை.
தரவு 3: வைரலாகும் காசோலையில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 08 (08/11/2016) என்று தேதியிடப்பட்டுள்ளது.
ஆனால் மார்ச் 2 2016 (02/03/2016) அன்றே மல்லையா இந்தியாவை விட்டே வெளியேறி விட்டார்.
விஜய் மல்லையா பாஜகவுக்கு 2016 ஆம் ஆண்டு 35 கோடி நிதியாக கொடுத்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் காசோலையின் புகைப்படம் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
The Hindu: https://www.thehindu.com/news/national/vijay-mallya-has-left-india-centre-informs-sc/article8331337.ece
Vijay Mallaya’ s Twitter Handle: https://twitter.com/TheVijayMallya/status/1011557284521152512
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024