schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Politics
“பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று, அதுக்குறித்து பேசி பயனொன்றும் இல்லை என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களுடன் நட்பாக பழகி, பின்னர் அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை வீடியோவாக எடுத்து, அதை காட்டி அவர்களிடம் பணம் பறித்து வந்தது ஒரு கும்பல்.
இந்த கும்பலால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலிசார் தரப்பில் அப்போது கூறப்பட்டது. இந்த கும்பலுக்கு அரசியல் பின்புலம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. பின்னர் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, சிபிஐ இவ்வழக்கை விசாரித்து வருகின்றது.
இந்நிலையில் “பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று, இனி அதைப் பற்றி பேசி ஒரு பயனுமில்லை” என்று அண்ணாமலை அவர்கள் பேசியதாக தந்தி தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.vn/tskV0
Archive Link:https://archive.vn/r6WQX
Archive Link: https://archive.vn/xkfUq
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இப்புகைப்படச் செய்தியின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று, இனி அதைப் பற்றி பேசி ஒரு பயனுமில்லை” என்று அண்ணாமலை அவர்கள் பேசியதாக புகைப்படச் செய்தி வைரலாகியதைத் தொடர்ந்து, அந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு ஆய்வு செய்ததில் வைரலாகும் இப்புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டப் புகைப்படச் செய்தி என்று நமக்கு தெரிய வந்தது.
அண்ணாமலை அவர்கள் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சராவார் என்று தெரிவித்திருந்தார். இதுக்குறித்த செய்தி புகைப்படச் செய்தியாக தந்தி தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளிவந்திருந்தது.
இப்புகைப்படச் செய்தியையே எடிட் செய்து பொள்ளாச்சி சம்பவம் குறித்து அண்ணாமலை அலட்சியமாகப் பேசினார் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படச் செய்தியையும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
அண்ணாமலை அவர்களும் வைரலாகும் இத்தகவலுக்கு மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று, அதுக்குறித்து பேசி பயனொன்றும் இல்லை என்று அண்ணாமலை அவர்கள் பேசியதாக பரவும் புகைப்படச் செய்தி பொய்யாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/baskar.pal/posts/3907647472627196
Facebook Profile: https://www.facebook.com/elamvazhuthi.kalaiarasan/posts/3671386299597271
Thanthi TV: https://twitter.com/ThanthiTV/status/1363022064739786752
K.Annamalai: https://twitter.com/annamalai_k/status/1363333951004229635
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024
|