schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்பவர் அவரிடம் படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதால், அவர்மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் கைதுக்குப்பின் இவர் குறித்தும் இவர் பணி புரிந்த பள்ளி குறித்தும் அடுக்கடுக்கான பல புகார்கள் சமூக வலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் வெளிவந்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.ph/dWH8h
Archive Link: https://archive.ph/nkFew
Archive Link: https://archive.ph/2UDSD
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, இத்தகவல் உண்மைதானா என்பதை அறிய இதுக்குறித்து தேடினோம். நம் தேடலில் இத்தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.
திமுகவின் தலைமைக் கழக வழக்கறிஞர் வெற்றிக் கொண்டான் அவர்கள் பரவி வரும் இத்தகவல் குறித்தும், இத்தகவலை பரப்பிய நாராயணன் சேஷாத்திரி என்பவர் மீதும் புகார் ஒன்றை காவல்துறையினரிடம் அளித்துள்ளார்.
அப்புகாரில்,
“தற்போது சென்னையில் உள்ள ஒரு பிரபலமான பள்ளியின் ஆசிரியர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளது.
இது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாகத் தற்போது (Face Book) போன்ற சமூக வலைதளங்களில் சில விஷமிகள் இந்த விஷயத்தைப் பற்றியோ அல்லது அதன் மீது காவல்துறை உடனடியாகப் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தது குறித்தோ எந்த சிந்தனையும் இல்லாமல் வேண்டுமென்றே திமுக தலைமையிலான தமிழக அரசின் மீதும், திமுகவின் மீதும் அவதூறு பரப்பும் நோக்கில் சில பொய்த் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
குறிப்பாக நாராயணன் சேஷாத்திரி என்பவர், கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் என்ற ஆசிரியர், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்குச் சொந்தக்காரர் என்றும், அதனால் இந்த வழக்கை மூடி மறைத்து விடுவார்கள் என்றும், பொது வெளியில் ஒரு சமூக வலைதளத்தில் (Face Book) தன்னுடைய கூற்றிற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல், தான் கூறுவது பொய் என்று உணர்ந்தோ அல்லது அதன் உண்மை குறித்து ஆராயாமலோ தன்னுடைய சித்தாந்தத்திற்கு எதிர்க் கருத்து கொண்டவர் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பெயரைக் கெடுக்கும் எண்ணத்தோடு இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மேலும் பலரும் இதனைப் பதிவிட்டு வருவதால் இந்த அவதூறு பலதரப்பட்டவர்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்பதும் பொய். அதேபோல் அப்படி அவர் உறவினர் என்பதால் தமிழக அரசு இந்த வழக்கை மூடி மறைக்கும் என்பதும் அவர் மீது நடவடிக்கை எடுக்காது என்பதும் கீழ்த்தரமான அவதூறு என்பதோடு அல்லாமல், ஆட்சியின் மீதும் எங்கள் கட்சியின் மீதும் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டு மற்றும் மக்களிடையே கட்சி மற்றும் ஆட்சியாளர்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்க கையாளப்படும் உத்தி.
எனவே, மேற்கூறிய நாராயணன் சேஷாத்திரி மற்றும் அதனைப் பின்பற்றி சமூக வலைதளங்களில் மீள் பதிவு செய்தோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்தப் பதிவுகளை நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி அவர்களும் இப்புகார் குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த புகார் குறித்த செய்தி ஊடகங்களில் வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் உறவினர் என்று சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
R.S. Bharathi’s Official Twitter Handle:
Kalaignar seithigal: https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/05/26/defamation-complaint-against-who-spreads-fake-news-about-rs-bharathi
Dailythanthi: https://www.dailythanthi.com/News/Districts/2021/05/27004820/RS-Bharathi-MP-in-the-case-of-teacher-Rajagopalan.vpf
Dinakaran: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=679824
Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/675114-defamatory-news-as-teacher-arrested-in-sex-case-rs-bharathi-s-relative-dmk-files-complaint.html
Complaint Copy: –
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 9, 2025
Ramkumar Kaliamurthy
May 26, 2021
Ramkumar Kaliamurthy
May 27, 2021
|