schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: கனடா நாட்டின் கொடிக்கு பதிலாக கர்நாடக மாநில கொடியை எரித்தனர் உ.பி. பாஜகவினர்.
Fact: வைரலாகும் இத்தகவல் தவறானதாகும். உண்மையில் இப்படம் மகாராஷ்டிராவில் 2021ஆம் ஆண்டு டிசம்பரில் எடுக்கப்பட்ட பழைய படமாகும். கர்நாடக கொடியை எரிப்பவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் அல்ல; சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள்.
“இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையே ராஜாங்க உறவு மோசமடைந்தை அடுத்து கனடா நாட்டின் கொடிக்கு பதிலாக கர்நாடக மாநிலக் கொடியை எரித்த உத்தர பிரதேசம் கோரக்பூர் மாவட்ட பாஜகவினர்” என்று குறிப்பிட்டு காவி உடைய அணிந்த சிலர் கர்நாடகா கொடியை எரிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இஸ்லாமியப் பெண்ணிற்கு நிற்காத பேருந்தை கர்நாடகாவில் உடைத்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
உ.பி. பாஜகவினர் கனடா நாட்டின் கொடிக்கு பதிலாக கர்நாடக மாநில கொடியை எரித்ததாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக வைரலாகும் கார்டில் குறிப்பிட்டுள்ள நம் டிவி நியூஸ் குறித்து தேடினோம். அதில் இப்பெயரில் ஃபேஸ்புக் பக்கம், யூடியூப் சேனல் போன்றவை இருப்பதை நம்மால் காண முடிந்தது. ஆனால் இவை தற்சமயம் தொடர்ந்து செயல்படுவதில்லை என்பதையும் காண முடிந்தது.
நம் டிவி நியூஸில் கடைசியாக ஜூலை 07, 2023 அன்று கடைசியாக நியூஸ்கார்டு ஒன்று வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதை தவிர்த்து சமீபத்தில் எவ்வித நியூஸ்கார்டும் இப்பக்கத்தில் பதிவிடப்படவில்லை.
இதனையடுத்து வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இத்தகவல் குறித்து ஆராய்ந்தோம். அதில் “Celebs demand release of Kannada activists, arrest of Shiv Sainks for burning K’taka flag” என்று குறிப்பிட்டு The Hans India டிசம்பர் 17, 2021 வெளியிட்டிருந்த செய்தியில் இதே படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது.
மகாராஷ்ட்ரா எகிகாரன் சமிதியை சேர்ந்த தீபக் தால்வியின் முகத்தில் கன்னட அமைப்பினர் மையை பூசியதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சார்ந்தவர்கள் கர்நாடக கொடியை எரித்ததாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டு போராட்டம் நடந்ததாக தி இந்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
கன்னட கொடி எரிக்கப்பட்டதற்கு சித்தராமையா, சிவராஜ்குமார், தர்ஷன், துனியா விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து X தளத்தில் பதிவுகள் பதிவிட்டிருப்பதையும் நம்மால் காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது யாதெனில்,
Also Read: கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக பரவும் பொய் தகவல்!
உ.பி. பாஜகவினர் கனடா நாட்டின் கொடிக்கு பதிலாக கர்நாடக மாநில கொடியை எரித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from The Hans India, Dated December 17, 2021
Report from The Hindu, Dated December 17, 2021
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 7, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
|