schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
வங்க தேசத்தில் நோயாளி ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் மருத்துவமனை சென்றார். இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் கொரானா இரண்டாம் அலையின் பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, சில மாநிலங்களில் முழு ஊரங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கொரானாவின் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்து வருகின்றது. கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவைகள் போதுமான அளவு இல்லாததால் இம்மாநிலங்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிகழ்வுகள் காரணமாக மோடி அரசையும், அவரது குஜராத் மாடலையும் பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். கூடவே குஜராத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பல புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றது.
இவற்றில் நோயாளி ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்றையும் குஜராத்தில் எடுக்கப்பட்டதாக கூறி பகிர்ந்து வருகின்றனர்.
Archive Link: https://archive.ph/FhjKm
Archive Link: https://archive.ph/bgDsH
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஆக்சிஜன் சிலிண்டருடன் நோயாளி ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, அப்புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.
இவ்வாறு ஆய்வு செய்ததில் வைரலாகும் புகைப்படம் வங்க தேசத்தில் எடுக்கப்பட்டது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
வங்க தேசத்தின் பாரிசல் பகுதியில் இளைஞர் ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டரை தன் முதுகில் கட்டிக்கொண்டு, கொரானாவால பாதிக்கப்பட்ட தன் தாயை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இத்தருணத்தில் எடுக்கப்பட்ட படமே தற்போது குஜராத்தில் எடுக்கப்பட்டதாக கூறி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்நிகழ்வு குறித்த செய்தியை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, நோயாளி ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதல், அது வங்க தேசத்தில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.
ஆக்சிஜன் சிலிண்டருடன் நோயாளி ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் புகைப்படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும், அப்படம் வங்க தேசத்தில் எடுக்கப்பட்டது என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
The Daily Star: https://www.thedailystar.net/coronavirus-deadly-new-threat/news/covid-19-son-ties-oxygen-cylinder-his-back-and-takes-mother-hospital-motorcycle-2079585
Prothomalo: https://www.prothomalo.com/bangladesh/district/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BF
Ajkershomoy: https://ajkershomoy.com/2021/04/17/%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A0%E0%A7%87-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0/
Amadershomoy: https://www.amadershomoy.com/bn/2021/04/18/1334192.asp
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 30, 2023
Ramkumar Kaliamurthy
August 2, 2023
Gayathri Jayachandran
May 14, 2020
|