schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
“அகமதாபாத்தில் , பட்டம் விடும் விழாவில், 3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற காட்சியால் அதிர்ச்சி” என்று அந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அண்ணாமலை பேசியதாகப் பரவும் பேச்சாளர் பெருமாள் மணியின் படையப்பா வெற்றி விழா உரை வீடியோ!
அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
கூகுளில் கீ-வேர்டுகள் மூலமாகத் தேடியபோது ஆகஸ்ட் 31, 2020 தேதியிட்ட The Guardian வெளியிட்டிருந்த செய்தி ஒன்று கிடைத்தது. அதில் குறிப்பிட்ட வைரல் வீடியோ எடுக்கப்பட்ட இடம் தைவான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், “தைவானைச் சேர்ந்த 3 வயது குழந்தை பட்டத்தின் கயிற்றில் மாட்டி பறந்த நிலையில், எந்தவித சேதமும் இல்லாமல் காப்பாற்றப்பட்டது. கடந்த ஞாயிறன்று Hsinchu நகருக்கு அருகில் அமைந்துள்ள Nanliaoவில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொண்ட போது அக்குழந்தை நீளமான ஆரஞ்சு நிற பட்டத்தில் மாட்டி தரையிலிருந்து பல மீட்டர்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
CNN வெளியிட்டிருந்த ஆகஸ்ட் 31, 2020 ஆம் ஆண்டு செய்தியில், “உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அக்குழந்தைக்கு சிறிய காயங்களே ஏற்பட்டிருந்தன. தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டார்” என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அச்செய்தியில் “இதுகுறித்து ஃபேஸ்புக்கில் HSinchu Mayor Lin Chih-Chien நடந்த நிகழ்வுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், பட்டம் விடும் திருவிழாவும் நிறுத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு பல்வேறு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள். நமது நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் இந்த வீடியோவின் உண்மையறியும் சோதனையை வெளியிட்டிருக்கிறோம்.
அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report By The Guardian, Dated August 31, 2020
Report By CNN, dated August 31, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|