schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ரிஷி சுனக் தனது அலுவலகம் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக கடந்த வாரம் செவ்வாய் கிழமை (அக்டோபர் 25) பதவியேற்று கொண்டார். அவர் பிரதமராக பதவியேற்று அவர் அலுவலகத்திற்குள் நுழையும் முன் விளக்கேற்றி வழிபட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டாரா?
ரிஷி சுனக் தனது அலுவலகம் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டதாக கூறி வீடியோ வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் பிரதமராக நுழைந்தது குறித்து ஊடகங்களில் வந்த செய்திகளை ஆய்வு செய்தோம். இதில் Independent.ie எனும் ஊடகத்தில் ‘ரிஷி சுனக் பிரதமராக 10 டவுனிங் தெருவில் நுழைந்தார்’ (Rishi Sunak enters 10 Downing Street for the first time as Prime Minister) என தலைப்பிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த செய்தியில் காணப்பட்ட வீடியோவில் ரிஷி சுனக் பிரதமராக இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்திற்குள் முதன்முறையாக பிரதமராக நுழையும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதில் சுனக் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தியதாக எந்த ஒரு காட்சியும் இல்லை. அலவகத்திற்குள் ஏற்கனவே இருப்பவர்களுக்கு வணக்கம் செலுத்தி கொண்டு ரிஷி சுனக் அலுவகத்திற்குள் நுழைவதாகவே அதில் இருந்தது.
Independent.ie தவர்த்து வேறு சில ஊடகங்களும் இதுக்குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. அவற்றிலும் வைரலாகும் வீடியோவில் காணப்படுவதுபோல் ரிஷி சுனக் விளக்கு ஏற்றும் காட்சி இடம்பெறவில்லை. அந்த செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
மேலும் வைரலாகும் வீடியோவில் காணப்படும் முகப்பு பகுதி சுவற்றின் வடிவமும் இங்கிலாந்து பிரதமர் அலுவலக முகப்பு பகுதி சுவற்றின் வடிவமும் வேறுபட்டிருப்பதை நம்மால் கண்டறிய முடிந்தது.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்று அவர் அலுவலகத்திற்குள் நுழையும் முன் விளக்கேற்றி வழிபட்டதாக கூறப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.
இதனையடுத்து வைரலாகும் வீடியோ உண்மையாக எப்போது, எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடினோம். இத்தேடலானாது, ‘Watch: Rishi Sunak Lights Diya On Downing Street In London Ahead Of Diwali’ என்று தலைப்பிட்டு நவம்பர் 13, 2020 அன்று NDTV வெளியிட்ட செய்தி ஒன்றுக்கு அழைத்து சென்றது. இந்த செய்தியில் தீபாவளியை முன்னிட்டு இங்கிலாந்து கருவூலத் தலைவர் அவரது அலுவலகத்தில் விளக்கேற்றியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இச்செய்தியில் The Indians in London Group பதிவிட்டிருந்த டிவீட் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இந்த டிவீட்டில் இணைக்கப்பட்டிருந்த வீடியோவில் சுனக் அவரது அலுவலகத்திற்குள்ளிருந்து வந்து, வாசலில் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றுவதாக இருந்தது. இந்த வீடியோவின் முப்பதாவது வினாடிகளில் வரும் ஒரு பகுதியை கத்தரித்து, அவர் பிரதமராக பதவியேற்று அவரது அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன் வழிபாடு செய்ததாக பரப்பப்பட்டு வருகின்றது.
நம் தொடர்ந்து தேடுகையில் சுனக்கின் தீபாவளி கொண்டாட்டம் குறித்து வெளிவந்த செய்திகளில் வைரலாகும் வீடியோவின் காட்சி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
மேலும், ரிஷி சுனக் நவம்பர் 14, 2020 அன்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தீபாவளி வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவிலும் வைரல் வீடியோவின் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை நம்மால் காண முடிந்தது.
Also Read: 15 தலைவர்களின் படங்களை ஒரே நேரத்தில் வரைந்த நூர்ஜஹான் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதா?
ரிஷி சுனக் தனது அலுவலகம் நுழையும் முன்பு விளக்கேற்றி வழிபட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(இச்செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது)
Sources
Report By Independent.ie, Dated October 25, 2022
Report By NDTV, Dated November 13, 2020
Tweet By @IIL2004, Dated November 13, 2020
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|