schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Data Reports
மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகின்றது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயிக்கிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கின்றனர்.
சென்ற மாத தொடக்கத்தில் இருந்து (மே 4ம் தேதி) பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்த தொடங்கியது. சென்னையில் இன்றைய பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.95.99க்கு விற்பனையாகி வருகின்றது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில், மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று கூறி நியூஸ்கார்ட் ஒன்று வைராலாகி வருகின்றது.
அந்த நியூஸ்கார்டில், பெட்ரோலின் அடிப்படை விலை ரூ 30.50, மத்திய அரசின் வரி ரூ.17.42, மாநில அரசின் வரி ரூ.40.55, விநியோகிஸ்தர் கமிஷன் ரூ. 08.50, ஆக மொத்தம் ரூ 96.97க்கு பெட்ரோல் விற்பனையாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நியூஸ்கார்டை காண்டீபம் எனும் ஆன்லைன் மீடியா கடந்த பிப்ரவரி மாதம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தது.
Archive Link:https://archive.ph/oTCBV
இதனைத் தொடர்ந்து பலர் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Archive Link: https://archive.ph/WfwRE
Archive Link: https://archive.ph/fLm0t
Archive Link: https://archive.ph/HXm3Y
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
முன்னதாக, மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.
பெட்ரோல் விலையானது அடிப்படை விலை, மத்திய அரசு வரி, மாநில அரசு வரி, விநியோகிஸ்தர் கமிஷன் ஆகியவற்றை ஒன்று கூட்டியே ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகின்றது.
இதில் அடிப்படை விலை, மத்திய அரசு வரி, விநியோகிஸ்தர் கமிஷன் ஆகிய மூன்றும் நாடு முழுவதும் ஒரே அளவிலேயே இருக்கும். மாநில வரி மட்டும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப மாறுபடும். தமிழகத்தைப் பொறுத்த வரை 15 சதவீதம் VAT வரியுடன் லிட்டருக்கு ரூ. 13.02 சேர்த்து வசூலிக்கப்படுகின்றது
டெல்லியில் இன்றைய பெட்ரோலின் விலை ரூ.94.49 ஆகும். இந்த விலை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இந்தியன் ஆயிலின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
இதன் அடிப்படையில் பார்க்கும்போது இன்றை பெட்ரோலின் அடிப்படை விலை ரூ 35.99, மத்திய அரசின் வரி ரூ.32.90, விநியோகிஸ்தர் கமிஷன் ரூ.3.79 என தெளிவாகின்றது.
இந்த மதிப்பை அனைத்தையும் ஒன்று கூட்டி, இன்றைய சென்னை விலையிலிருந்து கழித்தால் தமிழகத்தில் பெட்ரோலுக்கு எவ்வளவு மாநில வரி வசூலிக்கப்படுகின்றது என்பதை அறிய முடியும்.
95.99 – (35.99+32.90+3.79) = 23.31
ஆக தமிழகத்தின் மாநில வரி ரூ.23.31 ஆகும்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது மாநில அரசின் வரியான ரூ.23.31, மத்திய அரசின் வரியான ரூ 35.99-ஐக் காட்டிலும் குறைவாகவே உள்ளது என்பது தெளிவாகின்றது. அதேபோல் வினியோகிஸ்தர் கமிஷனும் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டதைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று கூறி வைரலாகும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகின்றது.
சமூக வலைத்தளங்களில் மோடி அரசுக்கு எதிராக பரப்பப்படும் பெட்ரோல் விலை நிலவரங்கள் என்று பரவும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
Ministry Of Petroleum: https://www.ppac.gov.in/content/149_1_pricespetroleum.aspx
Indian Oil: https://www.iocl.com/uploads/priceBuildup/PriceBuildup_petrol_Delhi_as_on_1_Jun-2021.pdf
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
November 8, 2024
Vijayalakshmi Balasubramaniyan
June 10, 2024
Ramkumar Kaliamurthy
June 6, 2024
|