About: http://data.cimple.eu/claim-review/3b897a7e3ac2a5916403c56139ea4705b653fdba32c904954eac0cf7     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks doneFOLLOW US Fact Check ஈராக்கில் அமைந்துள்ள ராமர்-அனுமன் சிற்பம் என்பதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. “ஈராக்கில் 6000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ராமர் மற்றும் அனுமான் சிற்பம்” என்பதாக இந்த புகைப்படம் பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: அயோத்தி ராமரை தினசரி தரிசிக்க வரும் குரங்கு என்று பரவும் தவறான வீடியோ தகவல்! ஈராக்கில் அமைந்துள்ள 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ராமர்-அனுமன் சிற்பம் என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம். குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அதே புகைப்படம் பதிவிடப்பட்ட பல்வேறு இணையதளங்கள் நமக்குக் கிடைத்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம். இப்புகைப்படம் குறித்து விக்கிமீடியா காமன்ஸ் இணையதளத்தில், “Darband-i Belula rock relief depicting a king, prince, ruler, or a high-ranking official, whose name reads Tar…dunni, Tar…ni, …birini, …irpirin, or …irbirini (the three dots indicate that the cuneiform signs couldn’t be read). He was probably a Lullubian, less likely a Gutian. The relief lies in Iraq, Sulaymaniyah Governorate, Horen Shekhan, near the Iraq-Iran border. Circa 2000 BC”. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ResearchGate புகைப்படத்தின் தலைப்பில், “அக்காடியன் காலத்தைச் சார்ந்த Darband-i Belula” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையே முக்கியத் தகவலாகக் கொண்டு “Darband-I Belula Sirwan” என்கிற கீ-வேர்ட் மூலமாகத் தேடியபோது அது நம்மை கடந்த மே 29, 2019ஆம் ஆண்டு வெளியான World History Encyclopaedia கட்டுரை ஒன்றிற்கு கொண்டு சென்றது. அதிலும் குறிப்பிட்ட புகைப்படத்தலைப்பு “Rock-Relief of Tar…dunni, Darband-i Belula” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குறிப்பிட்ட புகைப்படம் குறித்து, “இந்த கற்றளி சிற்பம் ஒரு வெற்றி வீரனுடையது. அவருக்கு முன்பாக இரண்டு கைதிகள் காணப்படுகின்றனர். சிற்பத்தின் வலதுபுறம் காணப்படும் அக்காடியன் எழுத்துரு வடிவம் குறிப்பிட்ட வீரரின் பெயர் “Tar…Dunni” இக்கியின் மகன் என்று கூறுகிறது.சமாஷ் மற்றும் அடாட் என்னும் கடவுள்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. “Tar-Dunni” ஒரு மன்னனாகவோ, இளவரசனாகவோ அல்லது ஒரு அரசு அதிகாரியாகவோ இருக்கலாம்; லுல்லுபி வம்சத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். மேலும், இவர்களுடைய காலம் துல்லியமாக வரையருக்கப்படவில்லை. Darband-i Belula (Belula Pass), Sulaymaniyah Governorate, Iraqi Kurdistan. Akkadian period, 2350-2006 BCE,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, குறிப்பிட்ட சிற்ப வடிவம் ராமர் மற்றும் அனுமன் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த கட்டுரையை எழுதியவர் வரலாற்று ஆய்வாளரும், நியூராலஜி இணை பேராசிரியருமான ஓஸ்மா சுகிர் முகமது அமின் என்பவராகும். Tripadvisor பக்கத்திலும் இடம்பெற்றுள்ள இப்புகைப்படம், “The Akkadian Rock-Relief of Darbandi Belula, dates back to 2200 BC, which represents victory of King ‘Tardoni’ on his enemies. – Picture of Darbandi Belula Relief, Sulaymaniyah.” என்கிற தலைப்புடன் இடம்பெற்றுள்ளது. ஓஸ்மா சுகிர் முகமது அமின் அவர்களின் யூடியூப் பக்கத்திலும் கடந்த மே 9, 2019 ஆம் ஆண்டு இந்த சிற்பம் குறித்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Also Read: பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியதா? ஈராக்கில் அமைந்துள்ள 6000 ஆண்டுகளுக்கு முன்பான ராமர்-அனுமன் சிற்பம் என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாகத் தெளிவாகின்றது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Sources Word History Encyclopaedia write-up, May 29, 2019 Wikimedia Commons photo Article From, Newschecker.in English, Dated January 23, 2023 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software