schema:text
| - Fact Check
சவுக்கு சங்கர் சாலை விபத்தில் மரணம் என்று பரவும் போலியான நியூஸ்கார்ட்!
சவுக்கு சங்கர் சாலை விபத்தில் மரணம் என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“சற்று முன் அசோக்பில்லர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மீது பைக் மோதியதில் சங்கர் என்கிற சவுக்கு சங்கர் சம்பவ இடத்திலேயே மரணம். லாரி டிரைவர் தப்பி ஓட்டம்” என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக ஊடகப் பிரபலமான சவுக்கு சங்கர் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சவுக்கு சங்கர் நாதக வேட்பாளராக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றாரா?
Factcheck/Verification
சவுக்கு சங்கர் சாலை விபத்தில் மரணம் என்பதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, கடந்த 2021 முதலே இந்த நியூஸ்கார்ட் பரப்பப்பட்டு வருவதையும், அப்போதே அந்த நியூஸ்கார்ட் “போலியானது” என்று சவுக்கு சங்கர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.
தொடர்ந்து, மீண்டும் தற்போது இந்த செய்தி வைரலாகிய நிலையில் நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்ட் வடிவில் வைரல் புகைப்படம் பரவி வருகின்ற நிலையில், “இந்த செய்தியை நியூஸ்7தமிழ் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்துள்ளது நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனம்.
Also Read: ஆளுநர் அளித்த விருந்தில் கலந்து கொண்டாரா அமைச்சர் பொன்முடி? உண்மை என்ன?
Conclusion
சவுக்கு சங்கர் சாலை விபத்தில் மரணம் என்று பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Twitter Post From, Savukku Sankar, Dated June 15, 2021
Facebook Post From, News 7 Tamil, Dated January 23, 2023
Twitter Post From, News 7 Tamil, Dated January 23, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 2, 2023
Ramkumar Kaliamurthy
March 7, 2023
Ramkumar Kaliamurthy
February 24, 2023
|