schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
தேர்தலில் தோற்றால் உயிரை விட்டு விடுவேன் என்று அஇஅதிமுக வேட்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான திரு.விஜயபாஸ்கர் போஸ்டர் ஒன்று ஒட்டியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. முகநூல் பக்கத்தில் பலரும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், விராலிமலைத் தொகுதியில் களம் காண்கிறார் சுகாதாரத்துறை அமைச்சரும், அஇஅதிமுக வேட்பாளருமான விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் அதிகளவில் பணம் செலவழிக்கப்படும் தொகுதியாக விராலிமலை தொகுதி இனம்கண்டறியப்பட்டு பறக்கும்படையினர், கண்காணிப்புக் குழுக்கள் என பிசியாக உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தனக்கு இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்யாவிட்டால் தான் உயிருடனே இருக்க மாட்டேன் என்று கூறியதாகப் போஸ்டர் ஒன்று முகநூலில் வைரலாகிறது.
அந்த போஸ்டரில், “வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டு கேட்பவர்களே தோல்வியடைந்தால் உயிரை விட்டு விடுவேன் என்று கூறும்பொழுது 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு பகல் பாராமல் ஒவ்வொரு கஷ்ட காலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும்? முடிவு உங்கள் கையில்” என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
Archived Link: https://archive.ph/q6HSA
Archived Link: https://archive.ph/PHnhf
Archived Link: https://archive.ph/r9mTh
More Archived Links: https://archive.ph/G3l7l
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தேர்தலில் தோற்றால் உயிரை விட்டு விடுவேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ஒட்டிய போஸ்டர் என்று பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அதன் முடிவில், அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த போஸ்டர் குறித்த விளக்கம் ஒன்றினை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுருப்பது நமக்குத் தெரிய வந்தது.
Archived Link: https://archive.ph/EFi1B
அதில், “இது முழுக்க முழுக்க தவறான செய்தி!
என் தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியிருக்கும் நற்பணிகள் மீதும் என் மக்களின் மீதும் நான் வைத்திருக்கும் நம்பிக்கை இமயம்போல உயர்ந்தது, உறுதியானது. இப்படிப்பட்ட கோழைத்தனமான வார்த்தைகளை எனக்கு சிந்திக்கக்கூடத் தெரியாது..நான் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டவன்.” என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட அந்த போஸ்டர் புகைப்படம் போலியாக பரப்பப்படுகிறது என்று அவர் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
தேர்தலில் தோற்றால் உயிரை விட்டு விடுவேன் என்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் போஸ்டர் ஒட்டியதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Vijayabaskar FB page: https://www.facebook.com/dr.c.vijayabaskar
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
January 20, 2025
Ramkumar Kaliamurthy
January 17, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 8, 2025
|