schema:text
| - Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற APPLE போன் நிறுவனரின் மனைவி 𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯
Fact: வைரலாகும் வீடியோவில் இருப்பவர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவியல்ல.
கும்பமேளாவில் கலந்து கொண்ட ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற APPLE போன் நிறுவனரின் மனைவி 𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: “திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?
Fact Check/Verification
கும்பமேளாவில் கலந்து கொண்ட ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் மனைவி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில், உண்மையாகவே ஸ்டீவ் ஜாப் மனைவி கும்பமேளாவில் கலந்து கொண்டுள்ளாரா என்று ஆராய்ந்தோம். அப்போது, ”Kailashanand Giri Ji Maharaj of Niranjani Akhara, along with Laurene Powell Jobs, wife of the late Apple co-founder Steve Jobs, visit Kashi Vishwanath Temple in Varanasi.” என்று செய்தி வெளியாகிருந்தது.இதிலிருந்து, ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ் கும்பமேளாவிற்கு வந்துள்ளார் என்பது உறுதியாகியது.
ஆனால், வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அதில் இடம்பெற்றிருப்பவர் ரிஷிகேஷில் ஆன்மிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற கலிபோர்னியாவைச் சேர்ந்த சாத்வி பகவதி சரஸ்வதி என்பது நமக்கு உறுதியாகியது.
எனவே, லாரன் பவல் ஜாப்ஸ் கும்பமேளாவிற்கு வந்திருந்தாலும் வைரலாகும் வீடியோவில் இருப்பவர் அவர் அல்ல என்பது உறுதியாகிறது.
Also Read: ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்றாரா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி?
Conclusion
கும்பமேளாவில் கலந்து கொண்ட ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று பரவும் வீடியோவில் இருப்பவர் சாத்வி பகவதி சரஸ்வதி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
X Post From, ANI, Dated January 11, 2025
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
|