About: http://data.cimple.eu/claim-review/55a0f775644caa253c85c7f4ab5cf68ffb1c39cd435a5cb0afb926d2     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • உண்மைச் சரிபார்ப்பு: புதைபடிவ எரிபொருட்களை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மலிவானது, நாம் எண்ணெய் இல்லாமலும் வாழலாம் சூரிய மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் இப்போது புதைபடிவ எரிபொருட்களை விட விலை குறைவானவை. Claim :எண்ணெய் இல்லாமல் நாம் வாழ முடியாது Fact :சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்கள், புதைபடிவ எரிபொருட்களை விட குறைந்த விலையில் கிடைக்கும். உலகம் தொடர்ந்து புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பது புவி வெப்பமடைதலையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தீவிரப்படுத்துகிறது. வெப்பநிலை பதிவு செய்யப்படும் காலம் தொட்டு 2010-2019 தசாப்தம் தான் அதிக வெப்பம் பதிவு செய்யப்பட்ட காலம் ஆகும். அதன் விளைவு சுற்றுச்சூழலுடன் நின்றுவிடாது - புதைபடிவ எரிபொருட்கள் பயன்பட்டால் தனிமனித உடல்நிலை, குடும்பங்களுக்கான மனநிலை, சமூக நல்லிணக்கம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளையும் கூட பாதிக்கின்றன. காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது . வறட்சி, வெள்ளம் மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் பெரும் தொகையினால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியல் சூழல் ஏற்படுகிறது. 2050 ல், காலநிலை மாற்றம் தொடர்பான பேரிடர்களால் 15 முதல் 20 கோடி மக்கள் இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான தீர்வு ஒன்று தான் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி உலகை நகர்த்துவதே. இந்த மாற்றம் எவ்வாறு உருவாக்கலாம் என்பதை ஆராய, இதில் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் நிறைய கதைகளை சேகரித்தோம். அவர்களின் வேலைகள் மாறுபடலாம், ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்று - சுத்தமான, நியாயமான மற்றும் நிலையான ஆற்றல் அனைவருக்கும் கிடைக்கும் எதிர்காலத்தை உருவாக்குவது. இதை தொடர்புபடுத்தி , “எண்ணெய் இல்லாமல் வாழ முடியாது” என்று சமூக வலைதளங்களில் ஒரு வாசகம் பரவி வருகிறது. உரிமைகோரலுக்கான இணைப்புகளை இங்கேயும் இங்கேயும் காணலாம். உண்மைச் சரிபார்ப்பு: அச்செய்தி பொய்யானது. எண்ணெய் இல்லாமல் வாழலாம். சூரிய மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் இப்போது புதைபடிவ எரிபொருட்களை விட குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதுதொடர்பாக செய்தி சேகரிக்கும் பொழுது Irena.com இல் வெளியான ஒரு கட்டுரையை கண்டோம். கட்டுரையில் Irena சூரிய மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் புதைபடிவ எரிபொருட்களை விட குறைந்த விலையில் கிடைக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் (IRENA) 2022 அறிக்கையில், புதிதாக உருவாக்கப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் புதைபடிவ எரிபொருளில் உருவாக்கப்படும் ஆற்றலை ஒப்பிடும் பொழுது 86% குறைவான செலவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டியுள்ளது. energymonitor.com புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான ஒரு கட்டுரையில் -- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் எண்ணையை மாற்ற முடியாது என்பது தவறான புரிதல் என்று குறிப்பிட்டுள்ளது. சூரிய மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் உலகளாவிய எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்டவை. தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் செலவுகளைக் கணிசமாகக் குறைத்துள்ளன, புதைபடிவ எரிபொருட்களை விட புதுப்பிக்கத்தக்கவை மிகவும் மலிவு. எடுத்துக்காட்டாக, 2021 இன் தரவின்படி, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்கள் மிகவும் குறைந்த செலவில் இயங்குவதாகவும், புதைபடிவ எரிபொருட்களை விட மலிவானதாகவும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது, எண்ணெய் அவசியம் என்ற காலாவதியான நம்பிக்கையை தகர்த்தெரிகிறது. எனவே மேலே உள்ள கட்டுரையின்படி, சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் விலை குறைந்து வருவது உலகளாவிய ஆற்றல் துறையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் ஏற்படுத்தும், மற்றும் புதைபடிவ எரிபொருட்களை விட அவை மிகவும் குறைந்த விலையில் இருப்பதால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்றும் நிலையான நீடித்த தீர்வை வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பது மட்டுமல்லாமல், பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்து சுற்றுச்சூழல் சிக்கல்களை தீர்க்க உதவும் எனவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு உலகம் மாறுவது வெறும் சுற்றுச்சூழலுக்கு மட்டும் நன்மை பயக்கும் என்பதல்ல, அதனால் பொருளாதார நன்மையையும், தூய்மையான வாழ்வும், சமத்துவம் நிறைந்த நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும். எனவே, அச்செய்தி தவறானது. சூரிய மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் இப்போது புதைபடிவ எரிபொருட்களை விட விலை குறைவானவை. ఇప్పుడు Desh Telugu Keyboard యాప్ సహాయంతో మీ ప్రియమైన వారికి తెలుగులో సులభంగా మెసేజ్ చెయ్యండి. Desh Telugu Keyboard and Download The App Now
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Telugu
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software