schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: அடிகுழாயை சுற்றி மணல் அள்ளிய தமிழகத்தின் விடியல்
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2018 முதலே பரவி வருகிறது.
திமுக ஆட்சியில் அடிகுழாயை சுற்றி மணல் அள்ளியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”என்னதான் மணல் கொள்ளை நடத்தினாலும் மக்களுக்கு பயண்படும் அடி பம்ப் விட்டு விட்டு மணலை கொள்ளையடித்த உங்களது நல்ல மனசு யாருக்கு வரும்…ஐ லைக் யுவர் நல்ல மனசு.இதுதான் விடியல் தமிழகத்தின் விடியல்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மணிப்பூர் வன்கொடுமையில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் நபர்கள் என்று பரவும் புகைப்படத் தகவல் உண்மையா?
திமுக ஆட்சியில் அடிகுழாயை சுற்றி மணல் அள்ளியதாகப் பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரல் பதிவில் இடம்பெற்றுள்ள அடிகுழாய் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கடந்த 2021ஆம் ஆண்டு முதலே இப்புகைப்படம் ஆந்திராவில் எடுக்கப்பட்டதாக கூறிய ட்விட்டர் பதிவு ஒன்று நமக்குக் கிடைத்தது. ஆனால், ஆந்திர அரசு இதனை உண்மையறியும் சோதனைக்கு உள்ளாக்கி இப்புகைப்படம் ஆந்திராவில் எடுக்கப்பட்டது அல்ல என்று விளக்கமளித்துள்ளது.
ஆனால், தொடர்ந்து இப்புகைப்படம் குறித்து தேடியபோது Foap என்கிற புகைப்படங்களுக்கான பக்கத்தில் unsuccesfull development, Photo by udayanga.k.ranathunga என்று இப்புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும், Maharashtra times என்கிற ஊடகத்தில் கடந்த செப்டம்பர் 17, 2018 அன்று இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
கடந்த செப்டம்பர் 18, 2018 அன்று இலங்கையைச் சேர்ந்த நடிகரான ரஞ்சன் ராமனாயகே இப்புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும், கடந்த செப்டம்பர் 15, 2018 அன்றே Made in Bannu என்கிற பாகிஸ்தானிய ஊடகத்தின் சமூக வலைத்தளப்பக்கத்தில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த புகைப்படம் குறிப்பிட்டு எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியாவிட்டாலும் கூட கடந்த 2018ஆம் ஆண்டு முதலே பல்வேறு மொழிகளில், பல்வேறு நாடுகளில் இப்புகைப்படம் பரவி வருகிறது என்பது உறுதியாகிறது.
எனவே, இப்புகைப்படம் தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது அல்ல என்பது நமக்கு தெளிவாகிறது.
Also Read: குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் அகற்றப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்ட்!
திமுக தற்போதைய ஆட்சியில் அடிகுழாயை சுற்றி மணல் அள்ளியதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook Post From, Made in Bannu, Dated September 15, 2018
News Article From, Maharashtra Times , Dated September 17, 2018
Facebook Post From, Ranjan Ramanayake, Dated September 18, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 4, 2025
|