Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Politics
முக்குலத்தோர் தயவில்லாமல் தன்னால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வென்று எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் மிகவும் தீவிரமாக வேலை செய்து வருகின்றது.
தேர்தலில் பெரும்பான்மையை பெற, அனைத்து சமூக மக்களின் ஆதரவையும் ஈட்ட அனைத்துக் கட்சியினரும் உழைத்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முக்குலத்தோர் தயவில்லாமல் தன்னால் ஆட்சிக் கட்டிலில் உட்கார முடியும் என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.
Archive Link:https://archive.vn/i4OHO
Archive Link:https://archive.vn/CAEQD
Archive Link:https://archive.vn/70YY4
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இந்த புகைப்படச் செய்தியின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
தேர்தல் நேரத்தில் எந்த ஒரு அரசியல் தலைவரும் பொதுப்படையாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறித்து இவ்வாறு பேச மாட்டார்கள். இவ்வாறு இருக்க எடப்பாடி பழனிசாமி அவர்கள் முக்குலத்தோர் குறித்து இவ்வாறு பேசி இருப்பாரா என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.
இந்த சந்தேகத்தை தெளிவு செய்ய சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படச் செய்தியை கூகுள் ரிவர்ஸ் சர்ச் (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம். இவ்வாறு ஆய்வு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த தகவல் பொய்யான தகவல் என்று நமக்கு உறுதியாகியது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் இத்தகவலை மறுத்து, மறுப்பு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
இதனடிபடையில் பார்க்கும்போது முக்குலத்தோர் ஆதரவு தேவை இல்லை என்று முதல்வர் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி பொய்யான ஒன்று என்பது நமக்கு உறுதியாகிறது.
அதிமுக பதிவிட்ட இந்த மறுப்பு பதிவில் கே.பி.முனுசாமி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை இழிவாகப் பேசியதாக பரப்பப்பட்ட தகவலுக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் குறித்து ஏற்கனவே நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து, அது பொய்யான தகவல் என்று உரிய ஆதாரத்துடன் விளக்கி இருந்தோம். அதுக்குறித்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
முக்குலத்தோர் தயவில்லாமல் தன்னால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தி தவறான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=1358935074477033&id=100010816598132
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=1120868451720334&id=100013915690670
AIADMK Official Twitter Page: https://twitter.com/AIADMKOfficial/status/1366296614969610242
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
January 20, 2025
Ramkumar Kaliamurthy
January 17, 2025
Vijayalakshmi Balasubramaniyan
January 8, 2025