Fact Check
‘கற்பிப்பு’ எனும் வார்த்தையை ‘கற்பழிப்பு’ என்று பிழையாக பேசினாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் கல்லூரி விழா ஒன்றில் ‘கற்பிக்கப்பட்ட’ என்ற வார்த்தையை ‘கற்பழிக்கப்பட்ட’ என்று தவறாக பேசியதாக ஜெயா பிளஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இச்செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராகுல் காந்தி பெண் ஒருவரை முத்தமிடுவது போன்று பிரியங்கா காந்தி முகத்தில் பத்திரிக்கையாளர் ரவிஷ் குமார் முகத்தை எடிட் செய்து பரப்பும் பாஜகவினர்!
Factcheck / Verification
முதலமைச்சர் ஸ்டாலின் ‘கற்பிக்கப்பட்ட’ என்ற வார்த்தையை ‘கற்பழிக்கப்பட்ட’ என்று தவறாக பேசியதாக ஜெயா பிளஸ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
ஜெயா பிளஸ் வெளியிட்டிருந்த செய்தியில் இடம்பெற்றிருந்த வீடியோவில் முதல்வர் ‘கற்பிக்கப்பட்டிருந்த’ என்ற வார்த்தையை தவறாக உச்சரித்து அதை மீண்டும் திருத்தி பேசி இருப்பதை காண முடிந்தது. ஆனால் அவர் தவறாக பேசிய வார்த்தை ‘கற்பழிக்கப்பட்டிருந்த’ என்பதுதானா என்பதை அவ்வீடியோவின் ஆடியோ குறைபாடு காரணமாக உறுதி செய்ய முடியவில்லை.
ஆகவே முதல்வர் கலந்துக்கொண்ட இவ்விழா குறித்து வேறு ஊடகங்களில் வந்துள்ளதா என தேடினோம். இத்தேடலில் தந்தி தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் முதல்வரின் பேச்சு முழுமையாக இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
அந்த வீடியோவை ஆய்வு செய்ததில் வீடியோவின் 8-ஆம் நிமிடத்தில் முதல்வர் பிழையாக பேசும் பகுதி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது. அதில் ‘கற்பிக்கப்பட்டிருந்த’ எனும் வார்த்தையை ‘கற்பறிக்கப்பட்டிருந்த’ என்று பிழையாக உச்சரித்திருப்பதை தெளிவாக கேட்க முடிந்தது.
இதனடிப்படையில் காண்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் ‘கற்பறிக்கப்பட்டிருந்த’ என்று உச்சரித்ததை ‘கற்பழிக்கப்பட்டிருந்த’ என்று உச்சரித்ததாக தவறான தகவலை ஜெயா பிளஸ் வெளியிட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.
Also Read: ஈரோடு கிழக்கில் திமுகவினரை பொதுமக்கள் விரட்டினரா?
Conclusion
முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் கல்லூரி விழா ஒன்றில் ‘கற்பிக்கப்பட்ட’ என்ற வார்த்தையை ‘கற்பழிக்கப்பட்ட’ என்று தவறாக பேசியதாக ஜெயா பிளஸ் வெளியிட்ட செய்தி தவறானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Sources
Youtube video from Thanthi Tv dated on February 8, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 5, 2025