About: http://data.cimple.eu/claim-review/677ffa9311b78b09f1eb01124b165bdf550e84a38e8f1b678f4b5c79     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check Fact Check: நோபல் அமைதி பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளர் பிரதமர் மோடி என நோபல் பரிசுக்குழு துணைத்தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாகப் பரவும் தவறான தகவல்! Claim நோபல் அமைதி பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளர் பிரதமர் மோடி – ஆஷ்லே டோஜே Fact வைரலாகப் பரவி வருகின்ற தகவல் தவறானதாகும். அவர், உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் வகையில் செயல்படவேண்டும் என்பதே என் நம்பிக்கை. பிரதமர் மோடிக்கும் அது பொருந்தும் என்று நம்புகிறேன் என்பதாகவே தெரிவித்திருந்தார். நோபல் அமைதி பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளர் பிரதமர் மோடி என்று நோபல் பரிசுக்குழு துணைத்தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாக செய்தி ஒன்று பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கம், தந்தி டிவி, News 7 தமிழ், நக்கீரன் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகிறது. “நோபல் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளர் பிரதமர் மோடி. அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளராக மோடி திகழ்கிறார்.” என்று நோபர் பரிசுக்குழு துணைத்தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாக இச்செய்தி பகிரப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: Fact Check: வந்தே பாரத் ரயிலை மத்தியபிரதேசத்தில் இருந்து இயக்கிய சுரேகா யாதவ் என்று தவறுதலாக செய்தி வெளியிட்ட சன் நியூஸ்! Fact Check/Verification நோபல் அமைதி பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளர் பிரதமர் மோடி என்று நோபல் பரிசுக்குழு துணைத்தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம். ANI நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இந்தியாவிற்கு நான் அரசியல் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அறிந்து கொள்ளவே வந்திருக்கிறேன். நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் நான். பொய்யான செய்தி, ட்வீட் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தியில் இருப்பது போன்று எதையும் நான் சொல்லியிருக்கவில்லை. தயவுசெய்து போலிச்செய்திகளுக்கு அதைப்பற்றி மேலும் மேலும் பேசுவதால் ஆக்சிஜன் அளிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார் என்பதாக அவர் பேசிய வீடியோ ஒன்று பரவி வருகிறது. ANI நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியிலும் மோடிக்கு நோபல் பரிசு என்று ஆஷ்லே டோஜே கூறியதாக எந்த இடத்திலும் இடம்பெற்றிருக்கவில்லை. ”பிரதமர் மோடியின் ’இது போருக்கான காலம் அல்ல’ என்கிற வார்த்தை நம்பிக்கைக்கான விதை.”என்பதாக தெரிவித்துள்ளார். ANI நிறுவனப் பேட்டியில் அவர், “நான் இந்தியாவிற்கு நோபல் பரிசு கமிட்டியின் துணைத்தலைவராக வரவில்லை. சர்வதேச அமைதிக்கான இயக்குனராக, ஒரு நண்பனாக வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், தங்களுடைய பேட்டியில் அவர் கூறிய போலிச்செய்தி என்கிற தகவல் குறித்த விளக்கத்தை ANI அளிக்கவில்லை. அந்த வீடியோ அவர்களுடையதா என்கிற விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதே நேரம், பிரதமர் மோடி நோபல் பரிசுக்கு தகுதியான போட்டியாளர் என்று அவர் கூறியதாகவும் அவர்களுடைய செய்தியில் கூறவில்லை. மேலும், ICF அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஆஷ்லே டோஜே, அந்நிகழ்வில் பிரதமர் மோடி அமைதிக்கான நோபர் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாக இருப்பார் என்று பேசினார் என்று செய்திகள் பரவிய நிலையில் அதை மறுத்துள்ளார் அந்த அமைப்பின் தலைவர் வைபவ் கே.உபாத்யா. The Print செய்தி ஊடகத்திற்கு பதிலளித்துள்ள அவர், “இந்திய செய்தி நிறுவனங்கள் டோஜேவின் உரையின் சாரம்சத்தை தவறாக மேற்கோள் காட்டியுள்ளன” என்று தெரிவித்துள்ளார். “இந்திய செய்தி ஊடகங்கள் டோஜே கூறியதாக கருத்து ஒன்றை தவறாக மேற்கோள் காட்டியுள்ளன. ஆனால், அவர் அப்படி பேசவில்லை. ஒருவேளை ஆர்வத்தால் இவ்வாறு நடந்திருக்கலாம். அப்படி இல்லாமல் உள்நோக்கத்துடன் இது நடைபெற்றிருந்தால் அது மிகப்பெரிய குற்றம்” என்று தெரிவித்துள்ளார். “உண்மையிலேயே நோபல் பரிசு பெரும் வாய்ப்புள்ள ஒருவரின் தகுதித்தன்மையை இதுபோன்ற தவறான பரப்புரைகள் குறைக்குமே தவிர அவர்களுக்கு எந்தவித நியாயத்தையும் செய்யாது” என்றும் அவர் மேலும் பேசியுள்ளார். NDTVவில் வெளியாகியுள்ள குறிப்பிட்ட நிகழ்வில் எடுக்கப்பட்டுள்ள அவரது பேட்டியிலும் கூட, உக்ரைன் போர் பற்றியே பேசியுள்ளார் டோஜே. The New Indian ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியிலும், “India’s power is growing. India is taken more seriously than in the past.” “PM Modi uses his power for good of mankind” என்றே தெரிவித்துள்ளார். மார்ச் 14 அன்று, ABP செய்திகளின் ஆசிரியரான அபிஷேக் உபாத்யாய் ஆஷ்லே டோஜேவின் ABPக்கான சிறப்பு பேட்டியின் ஸ்க்ரீன் ஷாட்டுகளைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், அதாவது அபிஷேக் உபாத்யாய், “பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கான சிறந்த போட்டியாளராக இருக்க கூடுமா?” என்று தனது கேள்வியைப் பதிவிட்டுள்ளார். ஆனால், ABPயில் வெளியாகிய ஆஷ்லே டோஜேவின் பேட்டியில் எந்த இடத்திலும் டோஜே, அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறந்த போட்டியாளர் மோடி என்பதாக தெரிவித்திருக்கவில்லை. இந்த பேட்டியில் பேட்டியாளர் ஆஷ்லே டோஜேவிடம், “ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த தகுதியான தலைவரா பிரதமர் மோடி?” என்று எழுப்பிய கேள்விக்கு டோஜே, “நீங்கள் ஒருவேளை பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்கான போட்டியாளரா என்று கேட்கிறீர்கள். இதுகுறித்து எல்லாருக்குமே நான் ஒரே பதிலே வைத்திருக்கிறேன். அனைத்து நாட்டுகளையும் சேர்ந்த அனைத்து தலைவர்களும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கான செயல்களைச் செய்ய முயல வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். பிரதமர் மோடியும் அதைச் செய்வார் என்று நம்புகிறேன். அவருடைய முயற்சிகளை நானும் பின்பற்றி வருகிறேன். நாம் எல்லோருமே. அவரது முயற்சிகள் பலனளிக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்பதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பேட்டியாளர் மீண்டும் “நோபல் கமிட்டியின் துணைத்தலைவராக அமைதிக்கான நோபல் பரிசுக்கான போட்டியாளரைத் தேடும் இடத்திலுள்ள நீங்கள், பிரதமர் மோடி ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் டோஜே, “பிரதமர் மோடிக்கு சவாலான வேலையை அளிப்பது என்னுடைய இடம் அல்ல. உலகிலுள்ள அனைத்து தலைவர்களும் அமைதிக்காக உழைக்க வேண்டும்; பிரதமர் மோடி மாதிரியான சக்தி வாய்ந்த தலைவர்களுக்கு அதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். இந்தியாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி உலகளாவிய அளவிளான வகையில் அமைதிக்கும் அவர் நேரம் ஒதுக்குவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று பதிலளித்தார். ஆனால், எந்த இடத்திலும் அவர் நோபல் பரிசுக்கு தகுதியான போட்டியாளர் பிரதமர் மோடி என்று சொல்லியிருக்கவில்லை. இதுகுறித்த, ஆங்கில உண்மையறியும் சோதனையை வெளியிட்டுள்ள BOOMLive, “குறிப்பிட்ட இந்த நிகழ்வை நடத்திய குழுவின் மனோஜ் குமார் ஷர்மாவை நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். அவர், தான் அந்த நாள் முழுவது ஆஷ்லே டோஜேயுடன் இருந்ததாகவும், அவர் அப்படி எந்த கருத்தையும் கூறவில்லை என்று விளக்கமளித்தார்.” என்று தெரிவித்துள்ளது. நோபல் கமிட்டியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், “The Committee does not itself announce the names of nominees, neither to the media nor to the candidates themselves. In so far as certain names crop up in the advance speculations as to who will be awarded any given year’s prize, this is either sheer guesswork or information put out by the person or persons behind the nomination. Information in the Nobel Committee’s nomination database is not made public until after fifty years.” என்று தெளிவாக ஏற்கனவே கூறியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான கேள்வி-பதில் குறித்த ட்விட்டர் பதிவில் ஆஷ்லே டோஜே, நோபல் பரிசு தேர்வு குறித்த அறிவிப்புகளில் ரகசியத்தன்மையை எந்த அளவு கடுமையாக நோபல் கமிட்டி கடைப்பிடிக்கிறது என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார். 2023ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுபவர்களுடைய பட்டியல் வருகின்ற அக்டோபர் 2-9 ஆம் தேதி வரையில் நோபல் பரிசுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என்று அக்கமிட்டி கடந்த மார்ச் 10ஆம் தேதியன்று தெரிவித்துள்ளது. Also Read: Fact Check: பள்ளி சீருடைகளுக்கு எதிராக தங்களது துப்பட்டாக்களைத் தூக்கி எறிந்தனரா மாணவிகள்? உண்மை என்ன? Conclusion நோபல் அமைதி பரிசுக்கு தகுதியான போட்டியாளர் பிரதமர் மோடி என்று நோபல் பரிசுக்குழு துணைத்தலைவர் ஆஷ்லே டோஜே கூறியதாகப் பரவுகின்ற செய்தி ஆதாரமற்றது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: False Sources Twitter Post From, JayKay, Dated March 17, 2023 YouTube Post From, Alternative Development Model Nobel Prize.Org Twitter post From, The New Indian, Dated March 16, 2023 YouTube Video From, NDTV News Report From, ANI, Dated March 16, 2023 YouTube Video From, ABP News Twitter Post From, Abhishek upadhyay, Dated March 14, 2023 Twitter Post From, The Nobel Prize, Dated October 07, 2022 Twitter Post From, The Nobel Prize, Dated March 10, 2023 News Report From, The Print, Dated March 16, 2023 Quote From, BOOMLive உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software