schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
சரியான இருக்கை ஒதுக்கப்படாத காரணத்தினால் புதுக்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவை எம்பி எம்.எம்.அப்துல்லா புறக்கணித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
“புதுக்கோட்டை ஆட்சியர் வசதியான நாற்காலி போடாததால் கோபித்துக் கொண்டு குடியரசு தின விழாவை புறக்கணித்து கிளம்பிய MP” என்று பாஜக தகவல் தொழில்நுட்ப அணித்தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் உட்பட பலரும் வீடியோத்தகவல் ஒன்றினை பரப்பி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் அடித்து விரட்டியதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?
சரியான இருக்கை ஒதுக்கப்படாத காரணத்தினால் புதுக்கோட்டையில் எம்பி எம்.எம்.அப்துல்லா குடியரசு தின விழாவைப் புறக்கணித்ததாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சரியான இருக்கை ஒதுக்கப்படாத காரணத்தினால் குடியரசு தினத்தை புறக்கணித்த எம்பி எம்.எம்.அப்துல்லா என்று சிடிஆர் நிர்மல் குமார் பதிவிட்டிருந்த ட்வீட்டிற்கு பதிலளித்த எம்பி எம்.எம்.அப்துல்லா, “கண்ணு தெரியலையாப்பா??? கையில ஊன்று கோல் இருப்பது தெரியலையா?? a vascular necrosis ஆல் அதிக நேரம் அமர முடியாது.. எனவே உடல்நலக் குறைவிலும் மரியாதை நிமித்தமாக வந்து தகவல் சொல்லிவிட்டு கிளம்பினேன். உடல் நலக் குறைவு என்பது யாருக்கும் வரும்.. நாளை உனக்கும் வரும் உணர்க” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதியன்றே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் எம்பி எம்.எம்.அப்துல்லா.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “உடல்நலக்குறைவு காரணமாக, குடியரசு தின விழாவிற்கு மரியாதை நிமித்தமாக சென்றுவிட்டு உடனடியாக திரும்பியதை தவறான நோக்கில் பரப்பி வருகிறார்கள். குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வருவதற்கு முன்பாக ஏற்கனவே இரண்டு தனியார் நிகழ்வுகளுக்கு வேறு செல்ல வேண்டியிருந்தது. அங்கேயும் என்னுடைய உடல்நிலையால் அமர்ந்திருக்க முடியவில்லை. தொடர்ந்து, குடியரசு தின நிகழ்வுக்கு வந்தபிறகும் தொடர்ந்து அமர்ந்திருந்ததால் இருக்கையில் அமர முடியாமல் வலி அதிகரித்துவிட்டது. அதனால் அங்கிருந்து கிளம்பினேன். கிளம்பும் வேளையில் வெளியில் நின்ற நிருபர் ஒருவர் கேட்டதற்கு அதிக நேரம் உட்கார முடியவில்லை; உடல்நலக்குறைவால் கிளம்புகிறேன் என்று கூறியதை திரித்து பரப்பி விட்டார்கள்.” என்று விளக்கமளித்தார்.
Also Read: பெண்கள் புகைப்படங்களை மார்ஃப் செய்து பரப்பிய பாஜக கிளைச் செயலாளரை அடித்து நொறுக்கிய பெண்கள்; வைரலாகும் தகவல் உண்மையானதா?
சரியான இருக்கை ஒதுக்கப்படாத காரணத்தினால் புதுக்கோட்டையில் எம்பி எம்.எம்.அப்துல்லா குடியரசு தின விழாவைப் புறக்கணித்ததாகப் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Twitter Post From, MP M.M.Abdulla, Dated January 26, 2023
Facebook Post From, MP M.M.Abdulla, Dated January 12, 2023
Phone Conversation with MP M.M.Abdulla, Dated January 28, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|