Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Politics
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என செய்தி ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
முதலில் ஒரு சினிமா தயாரிப்பாளராகவும், பின்பு ஒரு நடிகராகவும் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவரான ஸ்டாலின் அவர்களின் மகனான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியலில் குதித்தார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்பு இவருக்கு திமுகவில் இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
வரவிருக்கும் தமிழகத் தேர்தலில் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிகேணி தொகுதிகளில் போட்டியிட உதயநிதி விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தற்போது தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று உதயநிதி கூறியதாக தகவல் ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
Archive Link:https://archive.vn/dBJnL
Archive Link:https://archive.vn/2zE77
Archive Link:https://archive.vn/lK0Ju
ஊடகங்களில் வந்த இந்த செய்தி உண்மைதானா என்பதை அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உதயநிதி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று செய்தி பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
நம் ஆய்வில் இந்த செய்தி தவறான ஒன்று என்பது நமக்கு தெரிய வந்தது. தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களும் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவர்களும் நேற்று (௦2/03/2021) செய்தியாளர்களை சந்தித்தனர்.
அச்சந்திப்பில் உதயநிதி குறித்து ஊடகங்களில் வந்த செய்தி குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அது உறுதி செய்யப்பட்ட செய்தி கிடையாது என்று அவர்கள் பதிலளித்தனர்.
(கீழ்க்காணும் வீடியோவில் உதயநிதி குறித்த கேள்வி 8 நிமிடம் 30 வினாடிகளில் உள்ளது)
இதே செய்தி வேறு சில ஊடகங்களிலும் வந்திருந்தது. அச்செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனடிப்படையில் பார்க்கும்போது உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பது தெளிவாகின்றது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Velicham TV: https://twitter.com/velichamtvtamil/status/1366720401888346112
IBC Tamil: https://twitter.com/ibctamilmedia/status/1366728645209780224
Puthiya Thalaimurai: https://twitter.com/PTTVOnlineNews/status/1366718139749134338
Tamil Webdunia: https://www.youtube.com/watch?v=NyaEzQXODdY
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 4, 2025