About: http://data.cimple.eu/claim-review/7070bcc40bd9b16e733a48154f632fed09cdc1529b0bd4486091f75e     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • உண்மைச் சரிபார்ப்பு: காணொளியில் உள்ள தபேலா கலைஞர் ஜாக்கிர் ஹுசைன் அல்ல, அவர் உஸ்தாத் தாரி கான் வெகுவாக பரவிய காணொளியில் ஜாகிர் ஹுசைன் மற்றும் நுஸ்ரத் ஃபதே அலி கான் இணைந்து இசை நிகழ்ச்சி வழங்கியதாகக் காண்பிப்பது போலியான ஒன்று, நம்பகத் தன்மை அற்றது என்றும் அறியப்பட்டுள்ளது. Claim :ஒரு காணொளியில் ஜாகிர் ஹுசைன் மற்றும் நுஸ்ரத் ஃபதே அலி கான் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சி செய்வதாக காட்சிப்பதிவு. Fact :இந்த வீடியோவில் தபேலா வாசிக்கும் கலைஞர் ஜாகிர் ஹுசைன் அல்ல. அவர் உஸ்தாத் தாரி கான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாகிர் ஹுசைன், உலகின் தலைசிறந்த தபேலா கலைஞர்களில் ஒருவராக கருதப்படும் இந்திய பாரம்பரிய இசை நாயகன். இவர் தனது 73-ஆம் வயதில் காலமானார். அவருக்கு இடியொபதிக் பல்மனரி ஃபைப்ரோசிஸ் என்ற நுரையீரல் நோய் காரணமாக சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் நான்கு முறை கிராமி விருதும், பத்ம விபூஷண் உள்ளிட்ட இந்தியாவின் பல சிறப்பான விருதுகளையும் பெற்றுள்ளார். ஜாகிர் ஹுசைன் அவர்கள் தபேலாவை ஒரு தனித்துவமான உலகளாவிய இசைக்கருவியாக மாற்றியமைத்த பெருமைக்கு சொந்தக்காரர். அதற்குமுன் தபேலா, பெரும்பாலும் துணை இசைக்கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சமூக ஊடகங்களில், ஜாகிர் ஹுசைனின் மறைவுக்கு அனுதாபங்கள் பெருமளவில் வெளிப்பட்டன. பலர் அவரது இதுவரையிலும் வெளிவராப் புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளனர்; சிலர் அவருடன் எடுத்துக்கொண்ட நினைவுகளை மீண்டும் பகிர்ந்துள்ளனர். இந்த சூழலில், . "நுஸ்ரத் ஃபதே அலி கான் மற்றும் ஜாக்கிர் ஹுசைன். இந்த பைத்தியத்தை பாருங்கள். அவர்தான் கடைசி நாயகனாக இருந்தார்." என்ற தலைப்புடன் அது பகிரப்பட்டது. இது #ZakirHussain என்ற ஹாஷ்டேக் உடன் பகிரப்பட்டுள்ளது. 28 விநாடிகள் நீளமான ஒரு காணொளி வெகுவாக பரவி வருகிறது. அந்த காணொளியினை 191k பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர், 2066 பேர் விருப்பங்கள் மற்றும் 433 பகிர்வுகள் பெற்றுள்ளது. பரப்பட்ட செய்தினை கீழுள்ள படத்தில் காணலாம் உண்மைச் சரிபார்ப்பு: இந்தக் கூற்று தவறானது. வைரல் வீடியோவில் தபேலா வாசிப்பவர் ஜாகிர் ஹுசைன் அல்லர்; அவர் உஸ்தாத் தாரி கான் என்றும் கண்டறியப்பட்டது. ஜாகிர் ஹுசைன் மற்றும் நுஸ்ரத் பதேலி கான் இணைந்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியை தேடுகையில், 2017 செப்டம்பர் 24 அன்று Artistic India (ஆர்டிஸ்டிக் இந்தியா) எனும் யூடியூப் சேனல் பதிவேற்றிய ஒரு காணொளி கிடைத்தது. அதில், இருவரும் ஒரே மேடையில் பங்கேற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், தீவிரமாக கவனித்துப் பார்த்த போது, சமீபத்தில் வைரலான வீடியோவுடன் இது பொருந்தவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் இக்காணொலியின் ஆய்வு செய்யும்பொருட்டு, வெகுவாக பரப்பப்பட்ட வீடியோவில் இருந்து சில முக்கியப் பகுதிகளை எடுத்துக்கொண்டு, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அதற்கான நீண்ட பதிவு யோகேஷ் ஜக்தேவ் என்ற யூ-டியூப் சேனலில் 2011 ஆம் ஆண்டு ,ஜூலை 23 ஆம் நாளன்று பதிவேற்றப்பட்டிருந்தது அறிய முடிந்தது. அந்த காணொளியில், "உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கான் & உஸ்தாத் தாரி கான் நேரடி நிகழ்ச்சி" என விவரிக்கப்பட்டிருந்தது. இவ்வாய்வில் குறிப்பிட்ட இரண்டு காணொளிகளையும் ஒப்பிட்டு பார்த்தபோது, இரண்டும் ஒன்று தான் , அவை பொருந்தியது என்பதும் உறுதி செய்யப்பட்டது. உஸ்தாத் தாரி கான் மற்றும் நுஸ்ரத் ஃபதே அலி கான் நிகழ்ச்சி: Ustad Tari Khan And Ustad Nusrat Fateh Ali Khan Live Washington DC Ustad Tari Khan And Ustad Nusrat Fateh Ali Khan Live Washington DC YouTube Ustad Tari Khan And Ustad Nusrat Fateh Ali Khan Live Washington DC தி குவின்ட், செய்தித்தளம் இதன் உண்மைத்தன்மையை சரிபார்த்துள்ளது. அதில், வைரல் வீடியோ ஜாகிர் ஹுசைன் மற்றும் நுஸ்ரத் ஃபதே அலி கான் இணைந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் எதுவும் பதிவாகவில்லை என்று உறுதி செய்துள்ளது. முடிவு: வெகுவாக பரவிய காணொளியில் ஜாகிர் ஹுசைன் மற்றும் நுஸ்ரத் ஃபதே அலி கான் இணைந்து இசை நிகழ்ச்சி வழங்கியதாகக் காண்பிப்பது போலியான ஒன்று, நம்பகத் தன்மை அற்றது என்றும் அறியப்பட்டுள்ளது.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Telugu
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software