schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் மாவீரன் திப்பு சுல்தானின் உண்மையான உருவப்படம் என்று பழைய கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
திப்பு சுல்தான், மைசூரின் புலி என்கிற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட வரலாற்று வீரர். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மதச்சார்பின்மையைக் கடைபிடித்தவர் என்கிற பெருமை அவருக்கு இருக்கிறது.
நஞ்சன்கூடு மரகத லிங்கமும், மேல்கோட்டை நரசிம்மர் கோயில் முரசும் திப்பு சுல்தான் அரசால் வழங்கப்பட்டது என்கிறது வரலாறு. மைசூரில் திப்பு வழியில் இன்றும் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும், திப்பு சுல்தானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் மதம் சார்ந்த பல்வேறு சர்ச்சைக் கருத்துக்கள் அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்பட்டுத்தான் வருகின்றன.
இந்நிலையில், “திப்பு சுல்தான் அவர்களின் உண்மையான உருவப்படம். இலண்டன் பொருட்காட்சியகத்தில் உள்ளது.” என்கிற பெயரில் பழமையான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் மாவீரன் திப்பு சுல்தான் புகைப்படம் என்று பரவுகின்ற தகவல் குறித்து அறிய அதுகுறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டோம்.
முதலில், லண்டன் அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் சம்பந்தமான என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை அறிய British museum என்கிற இணையதளத்தில் ஆய்வு செய்தபோது 520 தொடர்புடைய பொருட்கள் அதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட புகைப்படம் இல்லை.
மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு வெற்றிலைப்பெட்டி உள்ளிட்ட திப்பு சுல்தானின் பொருட்கள் ஏலம் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதிலும் இதுபோன்ற புகைப்படம் குறித்த தரவுகள் இல்லை.
மேலும் சில தரவுகள்: https://heritagetimes.in/tipu-sultans-swords-and-ring-in-two-museums-in-london/
https://www.bl.uk/collection-items?date_created_published=1600&page=4# https://www.youtube.com/watch?v=Qaz0CO7qdeY
https://www.youtube.com/watch?v=ZVI2SJh1sz4
மேலும், திப்பு சுல்தானின் ஆட்சிக் காலமாக அறியப்படுவது 1782 முதல் 1799 வரையில். ஆனால், முதன்முதலில் புகைப்படக்கருவி கண்டறியப்பட்டதோ 1816 ஆம் ஆண்டு என்பதும் வரலாறு. ஆனால், குறிப்பிட்ட வைரல் தகவலில் இடம்பெற்றிருப்பது வரையப்பட்டது அல்ல; கருவியால் எடுக்கப்பட்ட புகைப்படம்.
வேறெங்கேனும் இதுபோன்ற புகைப்படம் இருக்கிறதா என்று தேடியதில் ஸ்காட்லாண்டு மியூசியம் ஒன்றிலும் திப்பு சுல்தானின் மினியேச்சர் புகைப்படம் என்று வரையப்பட்ட பழமையான புகைப்படமே இருப்பது நமது தேடலில் தெரிய வந்தது.
எனவே, குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ்ச் சர்ச் இமேஜ் தேடலுக்கு உள்ளாக்கினோம். தேடலின் முடிவில், “1893 – 1896 H.H. Sultan Sayyid Hamad bin Thuwaini, Sultan of Zanzibar and its dependencies, GCSI (23.2.1894). b. at Muscat, Oman.” என்கிற தலைப்பில் இதே போன்ற ஆனால் வேறொரு போஸில் மற்றொரு புகைப்படம் நமக்குக் கிடைத்தது.
மேலும், Rockysmith என்கிற தளத்தில் எழுதப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை ஒன்றில் சையித் ஹமாத் பின் துவினி என்பதும், அவர் தான்சானியாவின் Zanzibar பகுதியை 1893 முதல் 1896 வரையில் ஆண்டு வந்த சுல்தான் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Omanisilver என்னும் இணையதளத்தில் Oman and Zanzibar virtual museum என்கிற பகுதியில் இதே புகைப்படம் சையித் ஹமாத் பின் துவினி அல் புசித் என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.
எனவே, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் குறிப்பிட்ட புகைப்படம் திப்பு சுல்தானுடையது அல்ல என்றும், அது லண்டன் மியூசியத்தில் இருப்பதாக தகவல்களும் இல்லை என்பது இதன் மூலமாக உறுதியாகிறது.
லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் மாவீரன் திப்பு சுல்தான் புகைப்படம் என்று பரவுகின்ற தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
British museum: https://www.britishmuseum.org/collection/term/BIOG14868?id=BIOG14868&page=5#page-top
ET: https://economictimes.indiatimes.com/magazines/panache/tipu-sultans-20-bore-flintlock-gun-and-bayonet-fetch-60000-at-uk-auction/articleshow/68596489.cms
Rockysmith: https://rockysmith.net/2019/05/03/the-brief-reign-of-khalid-bin-barghash/
Pantheon: https://pantheon.world/profile/person/Hamad_bin_Thuwaini_of_Zanzibar
Omani Silver: http://omanisilver.com/contents/en-us/d48.html
Refer article for more Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 5, 2022
Ramkumar Kaliamurthy
March 25, 2022
Ramkumar Kaliamurthy
May 29, 2023
|