schema:text
| - Fact Check
அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியை இந்தியப் பிரதமர் என்று செய்தி வெளியிட்டதா சன் நியூஸ்?
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை இந்தியப் பிரதமர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறிந்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையும்! ஜே.பி.நட்டாவின் தவறான தகவல்களும்!!
Fact Check/Verification
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை இந்தியப் பிரதமர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ்கார்ட் என்பதை அறிய முடிந்தது.
கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் ஜப்பான் பிரதமரான ஷின்ஜோ அபேக்கு ஜப்பானிய அரசு நேற்று (செவ்வாய் கிழமை) நினைவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள இந்தியப் பிரதமர் நேற்று ஜப்பான் சென்றார்.
இதுக்குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்தி வந்திருந்தது. சன் நியூஸும் இதுக்குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் இச்செய்தியில் பிரதமர் மோடி படத்தையே பயன்படுத்தி இருந்தது
இந்த நியூஸ்கார்டில் பிரதமர் முகத்திற்கு பதிலாக கௌதம் அதானியை முகத்தை மாற்றி எடிட் செய்துள்ளனர். வாசகர்களின் தெளிவிற்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனையடுத்து சன் நியூஸின் டிஜிட்டல் தலைவர் மனோஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்ததில், அவரும் அது போலியான நியூஸ்கார்ட் என்பதை உறுதி செய்தார்.
Also Read: 300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக வதந்தி
Conclusion
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை இந்தியப் பிரதமர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்டானது எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Sources
Phone Conversation with Manoj, Digital Head, Sun News, on September 28, 2022
Tweet by Sun News, September 27, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
February 5, 2025
Ramkumar Kaliamurthy
January 3, 2025
Ramkumar Kaliamurthy
December 28, 2024
|