schema:text
| - Fact Check
முதல்வர் ஸ்டாலின் பேச்சை அரைமண்டை பேச்சு என்று விமர்சித்தாரா ஊடகவியலாளர் விஷன்?
முதல்வர் ஸ்டாலின் பேச்சை அரைமண்டை பேச்சு என்று ஊடகவியலாளர் விஷன் விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் நேற்று (13/06/2022) ‘எண்ணும் எழுத்தும்’ எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், ‘படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாகக் காட்டினால், அதற்கு இணையாகப் படித்துச் சாதித்தவர்கள் லட்சம் பேரை நாம் காட்டமுடியும்! ‘படிக்காமலே சாதிக்கலாம்’ என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல; அது வெறும் ஆசை வார்த்தை!’ என்று பேசினார்.
இக்கருத்துக்கு ஊடகவியலாளர் விஷன் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “மெக்காலே கல்வி முறையை ஏற்றுக்கொண்டு அயல்நாட்டு நிறுவனத்திற்கு கூலி வேலை பார்க்கும் அடிமைத்தனத்தை வளர்ச்சி என்று அரமண்டை தனமாக பேசாதீர்கள் முதல்வர் அவர்களே!” எனும் கருத்தை தெரிவித்ததாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read: இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என்றாரா மொயின் அலி?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
முதல்வர் ஸ்டாலின் பேச்சை அரைமண்டை பேச்சு என்று ஊடகவியலாளர் விஷன் விமர்சித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக விஷன் மேற்காணும் கருத்தை எங்கேயாவது தெரிவித்துள்ளாரா என்பதை உறுதி செய்ய அவரது சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் பொது ஊடகங்களை ஆய்வு செய்தோம்.
இதில் விஷன் அவரது டிவிட்டர் பக்கத்தில் முதல்வரின் நேற்றைய பேச்சுக்கு ஆதரவாக டிவீட் ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து விஷன் அவர்களை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர், அத்தகவல் பொய்யானது, இக்கருத்தை நான் தெரிவிக்கவில்லை” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து, வைரலாகும் இத்தகவலானது நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என தெளிவு செய்ய நியூஸ் 7 தமிழின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.
இதில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று நியூஸ் 7 வெளியிட்ட மறுப்பு பதிவை நம்மால் காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சாரங்கராஜும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று நம்மிடம் உறுதி செய்தார்.
Also Read: இந்திய முஸ்லீம்கள் தேசிய கொடியை எரித்ததாக பரவும் புகைப்படம்!
Conclusion
முதல்வர் ஸ்டாலின் பேச்சை அரைமண்டை பேச்சு என்று ஊடகவியலாளர் விஷன் விமர்சித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் முற்றிலும் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Fabricated Content / False
Sources
Newschecker Coversations
News 7 Tamil’s Tweet, tweeted on June 13, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
November 10, 2021
Vijayalakshmi Balasubramaniyan
August 29, 2024
Ramkumar Kaliamurthy
April 5, 2022
|