Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: கேரளாவில் பர்தா இல்லாத பெண்களை பேருந்தில் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண்கள் தெரிவித்தனர்.
Fact: இத்தகவல் தவறானதாகும். பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காததால் கல்லூரி மாணவிகள் சாலையில் இறங்கி போராடிய வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
கேரளாவில் பர்தா இல்லாத பெண்களை பேருந்தில் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண் பயணிகள் தெரிவித்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அடையார் ஆனந்த பவன் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்றதா?
கேரளாவில் பர்தா இல்லாத பெண்களை பேருந்தில் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண் பயணிகள் தெரிவித்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் மறுநாடன் டிவி எனும் யூடியூப் பக்கத்தில் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்த செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. கேரளாவின் காசர்கோடு பகுதியில் உள்ள பெண்கள் தனியார் கல்லூரியின் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காததால் மாணவிகள் சாலையில் இறங்கி போராடியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த தனியார் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் இத்தகவலை தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து தேடுகையில் தேர்ட் ஐ மீடியா எனும் ஃபேஸ்புக் பக்கத்திலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்யுடன் பகிரப்பட்ட வீடியோவில் ஒரு இந்து பெண்மணியுடன் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை காண முடிந்தது. அவ்வீடியோவில் உங்களுக்கு ஒரு பெண் இருந்தால் இந்த மாதிரி பேசுவீர்களா என்று அப்பெண்மணியிடம் மாணவிகள் கேட்பதையும், நாயின் மகள் என்று அப்பெண்மணி திட்டியதாக மாணவிகள் கூறுவதையும் காண முடிந்தது. இதை தவிர்த்து பர்தா குறித்தோ அல்லது மதம் குறித்தோ எந்த ஒரு வாதமும் அதில் இடம்பெறவில்லை.
இதுத்தவிர்த்து மேலும் சில செய்தி நிறுவனங்கள் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இச்சம்பவம் பேருந்து பிரச்சனை காரணமாக எழுந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே காணலாம்.
இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த கும்ப்ளா பகுதியின் காவல் நிலைய அதிகாரி அனுப் குமாரை நியூஸ்செக்கர் தரப்பிலிருந்து தொடர்புக் கொண்டு இச்சம்பவம் குறித்து விசாரித்தோம். அவர் இச்சம்பவத்திற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இச்ம்பவம் தொடர்பாக புகார்கள் ஏதும் வராததால் யார் மீதும் வழக்கு தொடரப்படவில்லை என்று தெரிவித்தார்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தாததை கண்டித்து மாணவிகள் போராடிய சம்பவத்தை திரித்து மத ரீதியான பொய்யான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.
Also Read: காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுகிறதா?
கேரளாவில் பர்தா இல்லாத பெண்களை பேருந்தில் அனுமதிக்க மாட்டோம் என முஸ்லிம் பெண் பயணிகள் தெரிவித்ததாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook Post by Third Eye Media on October 21, 2023
News Report by Marunadan TV on October 21, 2023
Telephone Conversation with Kumbla Station House Officer Anoob Kumar E
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
January 22, 2025
Ramkumar Kaliamurthy
December 18, 2024
Vasudha Beri
December 17, 2024