schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் முறையே இலவச விவாகரத்து; இலவச திருமணம் என்கிற அறிவிப்புகளை வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அஇஅதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தேர்தல் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக உள்ளன. மேலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தொகுதிகளில் போட்டியிடப்போகும் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டிலும் எல்லா கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றன.
மு.க.ஸ்டாலின் திமுக சார்பிலும், எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பிலும் தேர்தல் வாக்குறுதிகள், பரபரப்பான பரப்புரைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே பரப்புரைக் களத்திலும் கட்சிகள் பிசியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒருபக்கம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை என்று அறிவிக்கும்போதே, மற்றொரு பக்கம் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தலைவிகளுக்கு 1500+ ஆறு சிலிண்டர்கள் இலவசம் என்றெல்லாம் அதிரடி அறிவிப்புகளையும் இறக்கியுள்ளார்.
இவற்றை குறிவைத்து வதந்திகளும் பரப்பப்படும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் முறையே “90’ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு வருடத்துக்குள் திருமணம் செய்து வைக்கப்படும்; திருமணம் செய்து துன்பத்தை அனுபவிப்பவர்களுக்கு இலவசமாக விவாகரத்து வாங்கித் தரப்படும்” என்கிற நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
Archived Link: https://archive.ph/fc85F
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்புகள் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் அப்புகைப்படத்தில் நியூஸ் 7 தமிழின் நியூஸ் கார்டு வடிவம் இடம்பெற்றுள்ளதால் அக்குறிப்பிட்ட செய்தி ஊடகத்தின் சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்து பார்த்தோம்.
ஆனால், அவர்கள் அப்படி எதுவும் செய்தி வெளியிடாததோடு, அதுகுறித்து குறிப்பிட்ட அந்த ஊடகத்தினரிடம் விசாரித்தபோது அது போலியாக உருவாக்கப்பட்ட நியூஸ்கார்டு என்பதும் நமக்குத் தெரிய வந்தது.
மேலும், குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் நியூஸ் 7 டிவி உபயோகிக்கும் எழுத்து முறையும் உபயோகிக்கப்படவில்லை.
இதெல்லாம் தாண்டி 90களில் பிறந்தவர்கள் தங்களைத் தாங்களே ‘90’ஸ் கிட்ஸ்’ என்று அழைத்துக் கொண்டு மீம்ஸ்களை உருவாக்குவது போல, அதில் இதுவும் ஒரு அங்கம் என்பதை நாம் அறிந்து கொண்டோம்.
Archived Link: https://archive.ph/QCtG0
இந்த உண்மை தெரியாமல், இதனை உண்மை என நம்பி பலரும் வாட்ஸப், ஷேர் சாட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முறையே “திருமணம் செய்து துன்பத்தை அனுபவிப்பவர்களுக்கு இலவசமாக விவாகரத்து வாங்கித் தரப்படும்; 90’ஸ் கிட்ஸ்களுக்கு ஒரு வருடத்துக்குள் திருமணம் செய்து வைக்கப்படும்” என்று கூறியதாகப் பரவும் புகைப்படம் போலியாக, கிண்டலடிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதை விளக்கிக் கூறியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
News7 Tamil: https://twitter.com/news7tamil
Twitter: https://twitter.com/kannanthvar
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
February 6, 2025
Ramkumar Kaliamurthy
February 4, 2025
|