About: http://data.cimple.eu/claim-review/a8ff036a09f1dadc8f43d6b8ef69b74f2cf7200f295b117553c065f3     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Sun Feb 02 2025 14:36:21 GMT+0000 (Coordinated Universal Time) உண்மை சரிபார்ப்பு: பஞ்சாபில் நிஷா சோனியை கொலை செய்தது இசுலாமியரா? உண்மை நிலையை மாற்றி மதவாதம் பரப்பும் முயற்சியில் வைரலாகப் பரப்பட்ட பதிவை தணிக்கை செய்ததில், இந்துக் பெண்ணை இசுலாமிய ஆண் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யாகும் என நிரூபிக்கப்பட்டது Claim :நீலம் என்ற பெண் மொஹம்மது ஹமீத் என்பவரை திருமணம் செய்த பின் கணவரால் கொலை செய்யப்பட்டார். இந்து பெண்கள் இவர்களை நம்பி ஏமாறுகின்றனர் என்று உணர்த்தும் வகையில் வைரல் பதிவு பரவிவருகிறது Fact :கொலை செய்யப்பட்டது ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த நிஷா என்பதும், அவர் கொலைக்கான காரணம் அவரது காதலர் யுவராஜ் என்பதும் உண்மை கண்டறியும் சோதனையில் புலப்பட்டது சமீபத்தில் டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஒரு பெண்ணின் எரிந்த நிலையில் உள்ள உடல் சூட்கேசில் அடைத்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் இந்த கொலை தொடர்பாக இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். காவல்துறை தகவலின்படி, குற்றவாளி அமித் திவாரி, அந்தப் பெண்ணை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு, உடலை சூட்கேசில் வைத்து காஜிபூருக்குக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு தனது குற்றச்செயலை மறைக்க அந்த உடலை எரித்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கொலை ஜனவரி 25ஆம் தேதி கோடா காலனியில் நடைபெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில், சமூக ஊடகங்களில் ஒரு பதிவு வேகமாக பரவி வருகிறது. அதில், ஒரு இசுலாமிய ஆண், ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டு, சில மாதங்களில் கொலை செய்துவிட்டார் என்ற கருத்து பரப்பப்பட்டுள்ளது. இந்த தவறான தகவல் இந்தி மற்றும் கன்னட மொழிகளில் பரவி, குற்றவாளியின் பெயர் "மொஹம்மது ஆபித்" (Mohammad Abid) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வைரலாகப் பரவிவரும் கன்னடப் பதிவில், “ನೀಲಂ ಅಪ್ಪ ಅಮ್ಮನ ಮಾತು ಕೇಳದೆ ಅವರ ಮಾತುಗಳನ್ನು ವಿರೋದಿಸಿ "ಮಹಮ್ಮದ್ ಹಮೀದ್" ನನ್ನು ಮದುವೆಯಾಗಿ ಹೋದ 6 ತಿಂಗಳಲ್ಲಿ ಕಾಲುವೆಯೋಂದರಲ್ಲಿ ಶವವಾಗಿ ಪತ್ತೆಯಾಗಿದ್ದಾಳೆ... ನನ್ನ ಅಬ್ದುಲ್ಲ ತುಂಬಾ ಒಳ್ಳೆಯವನು ಎಲ್ಲರಿಗಿಂತ ಭಿನ್ನ ಎಂದು ಹಿಂದೂ ಹೆಣ್ಣು ಮಕ್ಕಳು ಲವ್ ಜಿಹಾದ್ ಗೆ ಬಳಿಯಾಗಿ ಈ ರೀತಿ ಆದಗಾಲೇ ಗೊತ್ತಾಗುವುದು ಎಲ್ಲಾ ಅಬ್ದುಲ್ಲಗಳು ಒಂದೇ ಎಂದು…” என்று கூறப்பட்டிருந்தது. இதை நாம் மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம். அப்போது, "நீலம் பெற்றோர்களின் சொல்லுக்கு எதிராக "மொஹம்மது ஹமீத்" என்பவரை திருமணம் செய்து கொண்டாள். 6 மாதத்தில் அவள் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டாள். இந்து பெண்கள் ‘என் அப்துல்லா மாறுபட்டவர்’ என்று சொல்லி காதல் ஜிகாத்திற்கு (Love Jihad) ஆளாகின்றனர். ஆனால், பின் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரிதான் என்று உணர்கிறார்கள்." என்று மொழிபெயர்க்கப்பட்ட தகவல் இருந்தது. பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம் உண்மைத் சரிபார்ப்பு: Telugupost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த காணொளி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. எங்களின் தணிக்கையை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் பயன்பாட்டில் இருந்து தொடங்கினோம். அப்போது, இது தொடர்பான ஒரு புகைப்படம் மெட்டாவின் ‘திரெட்ஸ்’ பக்கத்தில் கிடைத்தது. அந்த பதிவில், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படங்களும் ஜாக்ரன் செய்தித்தாளின் செய்திக் குறிப்பும் (Jagran News Article Clipping) இருந்தது. அதில் "பாக்ரா கால்வாயில் பெண்ணின் உடல் கிடைத்தது," எனத் தகவல் இருந்தது. இதில் இருந்து கிடைத்த தகவலில் அடிப்படையில், கூகுள் செய்திகள் பக்கத்தில் சம்பந்தப்பட்ட செய்திகள் உண்மையா என்பதை அறிய முயற்சித்தோம். அப்போது இது தொடர்பான செய்திகள் முன்னணி ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்த வகையில் லைவ் மின்ட் (Live Mint) செய்தித் தளத்தில் இது தொடர்பாக ஒரு செய்தியைக் கண்டோம். அதில், “22 வயது நிஷா (Nisha) என்பவர் பஞ்சாப் மாநிலம் பதியாலா மாவட்டத்தில் உள்ள பாக்ரா கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்திலிருந்து வந்தவர். சண்டிகர் நகரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஏர்-ஹோஸ்டஸ் (விமானப் பணிப்பெண்) பயிற்சியில் இருந்தார்,” என்று கூறப்பட்டிருந்தது. மேலும் நியூஸ் 18 (News 18 ) செய்தித் தளத்தில் சில தகவல்களைக் கண்டோம். அதில், “நிஷா, காவல் துறையில் பணிபுரியும் யுவராஜ் என்ற நபருடன் நண்பராக இருந்துள்ளார். ஜனவரி 20 அன்று இரவு, நிஷா யுவராஜுடன் வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவரது தொலைபேசி அணைக்கப்பட்டதால், குடும்பத்தினர் புகார் செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளிலும் அவர் யுவராஜுடன் சென்றிருப்பது உறுதியாகியுள்ளது,” என்று பதிவு செய்யப்பட்டிருந்தது. ஹிந்துஸ்தான் டைமஸ் (Hindustan Times) செய்தியில், “ரூப்நகர் காவல் துறையினர் பஞ்சாப் காவல்துறையில் வேலை பார்க்கும் யுவராஜ் என்ற காவலரை கைது செய்தனர். அவர்மீது பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita - BNS) சட்டத்தின் பிரிவு 103-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் உண்மையான பெயர் நிஷா என்பதும் அவர் நீலம் அல்ல என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரை ஒரு இசுலாமிய ஆண் கொலை செய்யவில்லை என்பதும் காவல்துறையில் பணிபுரியும் யுவராஜ் என்பவரே இந்த குற்றத்தை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. முக்கியமாக, இது காதல் ஜிஹாத் சம்பவம் அல்ல, ஆனால் சமூக ஊடகங்களில் மத வெறியை கிளப்ப தவறான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. News Summary - Nisha, an air hostess from Himachal Pradesh was murdered by her police constable friend in Punjab and the crime is being peddled as a love jihad incident. Claim : நீலம் என்ற பெண் மொஹம்மது ஹமீத் என்பவரை திருமணம் செய்த பின் கணவரால் கொலை செய்யப்பட்டார். இந்து பெண்கள் இவர்களை நம்பி ஏமாறுகின்றனர் என்று உணர்த்தும் வகையில் வைரல் பதிவு பரவிவருகிறது Claimed By : Social Media Users Claim Reviewed By : Telugupost Fact Check Claim Source : Social Media Fact Check : Misleading Next Story
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Telugu
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 3 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software