schema:text
| - கிரிக்கெட் கோப்பை: பாகிஸ்தான் அணி தோல்வியால் ரசிகர்கள் வன்முறை என பரவும் வதந்தி!
2025 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் நியூஸிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.
Claim :
இந்தியா தனது தேசிய அணியை தோற்கடித்த பிறகு, பாகிஸ்தான் ரசிகர்கள் துபாய் ஸ்டேடியத்தை சேதப்படுத்தினர்.Fact :
வெகுவாக பரப்பப்படும் இக்காணொளி 2022 ஆசிய கோப்பையில் ஷார்ஜாவில் நடந்த பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போட்டியில் நடந்த சம்பவத்தின் பதிவாகும்.
2025 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் நியூஸிலாந்து மற்றும் இந்தியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இதனால் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரமாண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டி, பாகிஸ்தான் அணியின் தடுமாற்றத்தால் ஒருதலைப்பட்சமாக முடிந்தது. துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில், இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. 42.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது.இந்திய அணியிடம் தோல்வி அடைந்த பிறகு, பாகிஸ்தானிய ரசிகர்கள் கடும் அதிருப்தியில் காணப்பட்டனர். சமூக ஊடகங்களில் வெகுவாக பரவி வரும் ஒரு காணொளியில், சிலர் துபாய் மைதானத்தில் இருக்கைகளை தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இது, பாகிஸ்தானிய ரசிகர்கள், இந்திய ரசிகர்களின் கொண்டாட்டங்களை தாங்க முடியாமல் அவர்களை நோக்கி இருக்கைகளை தூக்கி எறிந்தனர் என்ற கோணத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Claim: “நேற்று துபாயில் பாக்கீஸ்கார துலுக்கனுங்க இந்தியா வெற்றி பெற்றதை தாங்க முடியாம அங்கிருந்த இருக்கைகளை அடித்து உடைத்து அதை வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் மீது வீசி எறிந்தனர்.”
அதிகம் பகிரப்பட்ட பதிவின் இணைப்பு இங்கே!
இச்செய்தியின் பதிவுச் செய்யப்பட்ட தரவுப்படம்
உண்மை சரிப்பார்ப்பு:
இந்தக் காணொளியின் உண்மைத்தண்மை என்ன என்பதை தெளிவுப்படுத்தும் நோக்கில் தெலுங்குபோஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு இந்தக் காணொளியை ஆய்வு செய்தது. InVid செயலி மூலம் காணொளியின் முக்கிய காட்சிகளை பிரித்துப் பார்க்க, Google Reverse Image சோதனை செய்தபோது, அதன் உண்மையான பின்னணியை அறிய முடிந்தது.
இந்தக் காணொளி முதலில் 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியின் போது பதிவாகியிருக்கிறது என்பதும், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒரு வெறித்தனமான போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையின் காட்சிகள் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
Rediff.com வெளியிட்ட செய்தியில், 2022 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியதை பற்றிய விவரங்கள் வெளியானது. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 19 ஓவர்களுக்கு 119/9 என்ற நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்குத் தேவையான 11 ரன்களை நேசீம் ஷா இரண்டு சிக்சர்களால் எளிதாக அடித்து ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக் கனவை முறியடித்தார். இதனால் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் அதிருப்தியில் மைதானத்தில் இருக்கைகளை தூக்கி வீசியதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
இதற்கு தொடர்புடைய விவரங்களை கொண்ட மற்றொரு பதிவினை, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷொயப் அக்தர் தனது X (முன்பு ட்விட்டர்) கணக்கில் பகிர்ந்து, ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் செயலைக் கண்டித்திருந்தார்.
ஷொயப் அக்தர் வெளியிட்ட பதிவு:
மேலும், NDTV Sports மற்றும் Scroll செய்தித்தளங்களும் இதே சம்பவத்தைக் குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.
"இது ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் செய்த செயலாகும். இது ஒரு விளையாட்டு – இதை விளையாட்டாகவே அணுக வேண்டும். உங்கள் ரசிகர்களும், உங்கள் வீரர்களும் இன்னும் பல விஷயங்களைப் பழகிக் கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலே குறிப்பிட்டுள்ள ஆதாரங்கள் துபாயில் நடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபி இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் ரசிகர்கள் விளையாட்டு மைதானத்தைச் சேதப்படுத்தியதாக பரவும் காணொளி உண்மையல்ல. உண்மையில், அந்த வீடியோ 2022 ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது, ஷார்ஜா ஸ்டேடியத்தில் நடந்த சம்பவம் என்பதையே உறுதிச் செய்கிறது. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவல் முற்றிலும் தவறானது.
|