schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim: தமிழகத்தில் விவசாயிகள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ
Fact: உண்மையில் இவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் கேரளாவில் நடந்ததாகும்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் நிறுவனத்துக்கு இடம் கையகப்படுத்திய விவகாரம் தொடர்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், “தங்கள் விவசாய நிலங்களை பாதுகாக்க போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் சட்டத்தை பாய்ச்சிய சர்வாதிகாரி ஸ்டாலின் ஆட்சிக்கு விரைவில் ‘விவசாயி’ முடிவு கட்டுவான். இதே நிலையை இந்த களவாணி கூட்டத்திற்கு நடக்கும்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி அடிக்கல் நாள் அன்று கருப்பாடை அணிந்த காங்கிரஸ் எம்பிக்கள் எனப் பரவும் தவறான புகைப்படம்!
தமிழகத்தில் விவசாயிகள் தாக்கப்படுவதாக வைரலாகும் வீடியோவில் மலையாளத்தில் பெயர்பலகை இருப்பதையும், வீடியோவில் இருப்பவர்கள் மலையாளத்தில் கூச்சலிடுவதையும் காண முடிந்தது.
இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் “Public fight between CPI – CPM workers at Mananthavady” என்று தலைப்பிட்டு நவம்பர் 3, 2016 அன்று ஏசியாநெட் நியூஸில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
கேரளாவின் வயநாடில் உள்ள மானந்தவாடி பகுதியில் சாலையோரங்களில் கடை வைத்திருப்போரை அகற்றும் பணியில் அனைத்து கடைகளையும் அகற்றவில்லை என்று கூறி கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தியதாகவும், இப்பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்ததாகவும், இதை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டதாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் மீடியா ஒன் யூடியூப் பக்கத்திலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
Also Read: வீட்டிற்குள் தண்ணீர் வருவது போல தெரிந்தால் வீட்டின் கேட்களை இறுக்கமாக மூடி வையுங்கள் என்றாரா ஸ்டாலின்?
தமிழகத்தில் விவசாயிகள் தாக்கப்படுவதாக வைரலாகும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் இவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் கேரளாவில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from Asianet News, Dated November 03, 2016
Report from Media One, Dated November 03, 2016
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|