schema:text
| - Fact Check
சவுக்கு சங்கர் நாதக வேட்பாளராக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றாரா?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக ஊடகப் பிரபலம் சவுக்கு சங்கர் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
‘காங்கிரஸை வீழ்த்த ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் சார்பில் சவுக்கு சங்கர் களமிறக்கப்படுவார். பாஜக, அதிமுக அவரை ஆதரிக்க வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆளுநர் அளித்த விருந்தில் கலந்து கொண்டாரா அமைச்சர் பொன்முடி? உண்மை என்ன?
Fact Check/Verification
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக ஊடகப் பிரபலம் சவுக்கு சங்கர் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் தகவல் பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடக பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை பாலிமர் நியூஸ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து பாலிமர் நியூஸின் ஆசிரியரான சார்லஸை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்று தெளிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாக்கியராசனத் தொடர்புக்கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில், அவரும் இத்தகவல் பொய்யானது என்று உறுதி செய்தார்.
தொடர்ந்து தேடுகையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் பெண் ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதுகுறித்து வரும் 29 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று சீமான் நேற்று செய்தியாளர்களிடம் கூறி இருப்பதை காண முடிந்தது.
Also Read: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதா?
Conclusion
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சமூக ஊடகப் பிரபலம் சவுக்கு சங்கர் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Phone Conversation with Charles, Polimer News, Dated January 23, 2023
Phone Conversation with Pakkiarajan, Spokesperson, NTK, Dated January 23, 2023
YouTube post from Sathiyam News Dated January 22, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024
Ramkumar Kaliamurthy
June 30, 2023
|