schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ இனி இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு விற்பனை செய்வோம் என்று அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
“இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி விற்பனை செய்வோம்” என்று ஜொமோட்டோ நிறுவனம் அறிவித்ததாகவும், இந்த அறிவிப்பை தொடர்ந்து டிவிட்டரில் #Reject_Zomato எனும் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளதாகவும் கூறி புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து, இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read: தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தோல்வியடைந்தது என்று சி.வி.சண்முகம் கூறினாரா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
“இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் இனி விற்பனை செய்வோம்” என்று ஜொமோட்டோ நிறுவனம் அறிவித்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து இதன் உண்மைத்தன்மை குறித்து தேடினோம்.
முன்னதாக #Reject_Zomato என்கிற ஹேஷ்டேக் குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் #Reject_Zomato என்கிற ஹேஷ்டேகுக்கு பின்னனியில் உள்ள சம்பவமும், வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள தகவலும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமல் இருப்பதை அறிய முடிந்தது.
விகாஷ் எனும் நபர் ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இவர் செய்த ஆர்டரில் ஒரு உணவுப் பொருள் குறைவாக வந்துள்ளது. இதுக்குறித்து அவர் ஜொமோட்டோ வாடிக்கையாளர் சேவையை அணுகியுள்ளார். அவருடன் உரையாடிய வாடிக்கையாளர் சேவை முகவர், மொழிப் பிரச்சனை காரணமாக அவருக்கு உரிய உதவியை செய்ய இயல முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இதற்கு விகாஷ், தமிழ்நாட்டில் ஜொமோட்டோ வியாபாரம் செய்யும்போது, அவர்களுக்கு கண்டிப்பாக வட்டார மொழி தெரிந்திருக்க வேண்டுமல்லவா? வேறு யாருக்காவது என் அழைப்பை மாற்றி என் பணத்தை திருப்பி தர வழி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கு அந்த முகவர், இந்தி இந்தியாவின் தேசிய மொழி, ஆகவே அனைவரும் இந்தி மொழியில் சிறிது பேச கற்றிருக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து விகாஷ் இந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட்டை டிவிட்டரில் பகிர்ந்து, ஜொமோட்டோவையும் டேக் செய்தார்.
இதன்பின் இவ்விஷயமானது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் மிகப்பெரிய செய்திப் பொருளாக மாறியது.
இதனையடுத்து, ஜொமோட்டோ இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, அந்த வாடிக்கையாளர் சேவை முகவரை பணிநீக்கம் செய்தததாக தெரிவித்துள்ளது.
இதன்படி பார்க்கையில் இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் விற்பனை செய்வோம் என்று ஜொமோட்டோ கூறியதாக பரவும் தகவல் தவறானது என்பது புலனாகிறது.
இதனையடுத்து புதிய தலைமுறை வெளியிட்டதாக வைரலாகும் நியூஸ்கார்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய முற்பட்டோம். உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டதா என்பதை அறிய இந்த நியூஸ்கார்ட் குறித்து அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் பொறுப்பாளரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம்.
அதற்கு அவர்,
“இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை, இது முற்றிலும் பொய்யான நியூஸ்கார்ட்”
என்று விளக்கமளித்தார்.
Also Read: ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா?
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ இனி இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே உணவு விற்பனை செய்வோம் என்று அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Mr. Saravanan, Purthiya Thalaimurai Digital head
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
|